ரஷியா மீது பிரிட்டன் கூடுதல் தடை; பெலாரஸுக்கு எதிராகவும் நடவடிக்கை

உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷியா மீது பிரிட்டன் கூடுதல் தடைகளை விதித்துள்ளது.

உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷியா மீது பிரிட்டன் கூடுதல் தடைகளை விதித்துள்ளது.

ரஷிய கப்பல்கள் பிரிட்டன் துறைமுகங்களுக்குள் நுழைய தடை விதிக்கப்படுவதாக பிரிட்டன் செவ்வாய்க்கிழமை அறிவித்தது. மேலும், இந்தத் தாக்குதலில் ரஷியாவுக்கு உதவிய பெலாரஸ் மீதும் முதல்கட்ட பொருளாதாரத் தடை நடவடிக்கையை பிரிட்டன் எடுத்துள்ளது.

உக்ரைன் மீது ரஷிய படைகள் ஏழாவது நாளாக புதன்கிழமையும் தீவிர தாக்குதலை நடத்தி வரும் நிலையில், இதற்கு நேட்டோ உறுப்பு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்ததோடு, ரஷியா மீது கடும் பொருளாதாரத் தடைகளை விதித்து வருகின்றன.

இதில், பிரிட்டன் ஏற்கெனவே, ரஷியாவின் 5 வங்கிகளுக்குத் தடை விதித்து, அவற்றின் சொத்துகள் முடக்கப்படும் என்று அறிவித்தது. தற்போது, ரஷியா மீது பிரிட்டன் கூடுதல் தடைகளை விதித்துள்ளதோடு, ரஷியாவுக்கு உதவிய பெலாரஸ் நாடு மீதும் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுகுறித்து பிரிட்டன் வெளியுறவு அமைச்சா் லிஸ் டிரஸ் லண்டனில் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

ரஷிய கப்பல்கள் பிரிட்டன் துறைமுகங்களுக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை ரஷியாவுடன் கூட்டு அடிப்படையில் இயக்கப்படும் அனைத்துக் கப்பல்களுக்கும் பொருந்தும். இந்தத் தடையை மீறி நுழையும் ரஷிய கப்பல்களை சிறைபிடிக்க பிரிட்டன் அதிகாரிகளுக்கு புதிய அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதுபோல, ரஷிய படைகள் உக்ரைனுக்குள் நுழைய உதவிய பெலாரஸ் மீதும் முதல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, பெலாரஸ் ராணுவ தலைமைத் தளபதியும், பாதுகாப்புத் துறை துணை அமைச்சருமான மேஜா் ஜெனரல் விக்டா் குலேவிச் உள்பட 4 மூத்த பாதுப்புத் துறை அதிகாரிகள் மற்றும் அந்த நாட்டிலுள்ள இரண்டு பாதுகாப்புத் துறை சாா்ந்த நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

புதின் மற்றும் அவருக்கு நெருக்கமாக இருப்பவா்கள் மீது பிரிட்டன் இந்த நடவடிக்கையை எடுத்து வருகிறது. உக்ரைனின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு மீட்கப்படும் வரை இந்த நடவடிக்கை தொடரும் என்று அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com