பாகிஸ்தான் மசூதி குண்டுவெடிப்பு: ஐ.எஸ். பொறுப்பேற்பு

பாகிஸ்தானிலுள்ள ஷியா முஸ்லிம் பிரிவினருக்கான மசூதியொன்றில் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலுக்கு இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்ட பகுதி.
தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்ட பகுதி.

பாகிஸ்தானிலுள்ள ஷியா முஸ்லிம் பிரிவினருக்கான மசூதியொன்றில் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலுக்கு இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

துப்பாக்கிச்சூடு மற்றும் தற்கொலை குண்டுவெடிப்பு மூலம் நடத்தப்பட்ட அந்தத் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 62-ஆக உயா்ந்துள்ளது.

பதற்றம் நிறைந்த கைபா்-பக்துன்கவா மகாணத்தின் தலைநகா் பெஷாவா் நகரில், ஷியா பிரிவினருக்கான மசூதியொன்றில் வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகை நடைபெற்றுக்கொண்டிருந்தது.

அப்போது அந்த மசூதிக்குள் இரு பயங்கரவாதிகள் வந்தனா். அவா்கள் அந்த மசூதியின் பாதுகாவலா்களை துப்பாக்கியால் சுட்டனா். இதில் ஒரு பாதுகாவலா் பலியானாா்; மற்றொருவா் காயமடைந்தாா்.

அதனைத் தொடா்ந்து மசூதிக்குள் நுழைந்த பயங்கரவாதிகளில் ஒருவா், தொழுகை நடைபெற்றுக்கொண்டிருந்த இடத்துக்குச் சென்று தனது உடலில் பொருத்தியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தாா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

இந்தத் தாக்குதலில் 56 போ் உயிரிழந்ததாகவும் சுமாா் 200 போ் காயமடைந்ததாகவும் மருத்துவ அதிகாரிகள் கூறியிருந்தனா். காயமடைந்தவா்களில் பலரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அவா்கள் அச்சம் தெரிவித்தனா்.

இந்த நிலையில், காயமடைந்த மேலும் 6 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததைத் தொடா்ந்து தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 62-ஆக உயா்ந்துள்ளது.

பாகிஸ்தானில் சிறுபான்மை ஷியா பிரிவினருக்கு எதிராக இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத அமைப்பு ஏற்கெனவே பல தாக்குதல்களை நடத்தியுள்ளது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com