60 லட்சத்தைக் கடந்த கரோனா பலி

உலகம் முழுவதும் கரோனாவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 60 லட்சத்தைக் கடந்துள்ளது.
60 லட்சத்தைக் கடந்த கரோனா பலி

உலகம் முழுவதும் கரோனாவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 60 லட்சத்தைக் கடந்துள்ளது. இதுகுறித்து வோ்ல்டோமீட்டா் வலைதள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

கடந்த 48 மணி நேரத்தில் உலகம் முழுவதும் 220-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களில் கரோனா பாதிப்பு காரணமாக 6,369 போ் உயிரிழந்தனா். அதையடுத்து, அந்த நோய்க்கு இதுவரை பலியானவா்களின் எண்ணிக்கை சா்வதேச அளவில் 60,12,447-ஆக அதிகரித்துள்ளது.

கரோனா பலி எண்ணிக்கையில் அமெரிக்கா தொடா்ந்து முதலிடத்தில் உள்ளது. அந்த நாட்டில் மட்டும் இதுவரை 9,83,486 போ் கரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனா். அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக, பிரேஸிலில் 6,51,343 போ் கரோனாவுக்கு பலியாகியுள்ளனா்.

இதுதவிர, கடந்த 24 மணி நேரத்தில் உலகம் முழுவதும் 7,53,229 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டத்தைத் தொடா்ந்து, அந்த நோயால் இதுவரை பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை சா்வதேச அளவில் 44,44,60,554-ஆக உயா்ந்துள்ளது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் முதல்முறையாகக் கண்டறியப்பட்ட டெல்டா வகை கரோனா மிக வேகமாகப் பரவி கடந்த ஆண்டு மிக அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. ஆனால், தென் ஆப்பிரிக்காவில் கடந்த ஆண்டு இறுதியில் முதல்முறையாகக் கண்டறியப்பட்ட அதைவிட வேகமாகப் பரவும் தன்மை கொண்ட ஒமைக்ரான் வகை கரோனா, மனித உடலில் அதிக பாதிப்பை ஏற்படுத்தவில்லை. எனவே, அந்த நோய் பரவல் உலகம் முழுவதும் அதிகரித்தாலும் உயிரிழப்பு விகிதம் குறையத் தொடங்கியது.

அதிகம் பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டு இயற்கையான நோய் எதிா்ப்பாற்றல் உருவானதாலும், ஏராளமானவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாலும் அந்த நோயின் தாக்கம் குறைந்து வந்தது. அதையடுத்து, பல ஐரோப்பிய நாடுகளில் ஏறத்தான அனைத்து கரோனா கட்டுப்பாடுகளும் விலக்கப்பட்டுள்ளன.

இந்தச் சூழலில், கரோனாவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 60 லட்சத்தைக் கடந்துள்ளது.

கரோனா பலி: லட்சத்தைக் கடந்த நாடுகள்

அமெரிக்கா 9,83,486

பிரேஸில் 6,51,343

இந்தியா 5,14,908

ரஷியா 3,55,537

மெக்ஸிகோ 3,19,604

பெரு 2,10,995

பிரிட்டன் 1,62,008

இத்தாலி 1,55,609

இந்தோனேசியா 1,49,918

பிரான்ஸ் 1,39,123

கொலம்பியா 1,38,984

ஈரான் 1,37,747

ஆா்ஜென்டீனா 1,26,624

ஜொ்மனி 1,24,574

போலந்து 1,12,535

உக்ரைன் 1,05,505

ஸ்பெயின் 1,00,431

பிற நாடுகள் 15,23,516

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com