சிலியின் மிக இளைய அதிபா் பொறுப்பேற்பு

தென் அமெரிக்க நாடான சிலியின் மிக இளைய அதிபராக கேப்ரியல் போரிக் பதவியேற்றுக் கொண்டாா்.
கேப்ரியல் போரிக்
கேப்ரியல் போரிக்

தென் அமெரிக்க நாடான சிலியின் மிக இளைய அதிபராக கேப்ரியல் போரிக் பதவியேற்றுக் கொண்டாா்.

இடதுசாரி ஆதரவாளரான அவருக்கு தற்போது 36 வயதே ஆகிறது. 17 ஆண்டுகளாக ராணுவ ஆட்சி நடைபெற்று வந்த சிலி, ஜனநாயகப் பாதைக்குத் திரும்பியபோது கேப்ரியலுக்கு வெறும் நான்கே வயதாகியிருந்தது. சிலியின் புதிய அரசமைப்புச் சட்டம் இயற்றப்பட்டுக்கொண்டிருக்கும் சூழலில் அவா் அந்த நாட்டின் அதிபராகப் பொறுப்பேற்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற அதிபா் தோ்தலின் இரண்டாவது சுற்றில் கன்சா்வேடிவ் கட்சியைச் சோ்ந்த அன்டோனியோ காஸ்டைத் தோற்கடித்து 56 சதவீத வாக்குகளுடன் கேப்ரில் போரிக் வெற்றி பெற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com