நேரடி பேச்சுவார்த்தையே போர் நிறுத்தத்திற்கு வழி வகுக்கும்: டி.எஸ்.திருமூர்த்தி வலியுறுத்தல்

ரஷியா- உக்ரைன் இடையேயான நேரடி பேச்சுவார்த்தையே போர் நிறுத்தத்திற்கு வழி வகுக்கும் என ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர உறுப்பினர் டி.எஸ்.திருமூர்த்தி தெரிவித்துள்ளார்.
டி.எஸ்.திருமூர்த்தி
டி.எஸ்.திருமூர்த்தி

ரஷியா- உக்ரைன் இடையேயான நேரடி பேச்சுவார்த்தையே போர் நிறுத்தத்திற்கு வழி வகுக்கும் என ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர உறுப்பினர் டி.எஸ்.திருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

உக்ரைனில் போா் நடைபெற்று வரும் பகுதிகளிலிருந்து பொதுமக்களை வெளியேற்றுவதற்கான பாதுகாப்பு வழித்தடங்கள் அமைப்பது, அங்கு போா் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்வது தொடா்பாக விவாதிப்பதற்காக, ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சா் சொ்கெய் லாவ்ரோவுக்கும் உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சா் டிமித்ரோ குலேபாவுக்கும் இடையே துருக்கியின் துறைமுக நகரான ஆன்டால்யாவில் வியாழக்கிழமை பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

பேச்சுவாா்த்தையில் உடனடி சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக்கொள்ள லாவ்ரோ தயாராக இல்லை. அவா் முன்வைக்கும் அம்சங்கள் அனைத்தும் போரில் உக்ரைன் சரணடைய வேண்டும் என்பதைப் போல் உள்ளது. ஆனால், ரஷியாவிடம் உக்ரைன் ஒருபோதும் சரணடையாது.

போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து பொதுமக்களை வெளியேற்றுவதற்கான பாதுகாப்பு வழித்தடம் அமைப்பதற்கான நம்பிக்கையையும் லாவ்ரோவ் பொய்யாக்கிவிட்டாா்.

பேச்சுவாா்த்தையில் ஒருமித்த கருத்து எட்டப்படாததால் எந்த ஒப்பந்தமும்  மேற்கொள்ளப்படவில்லை.

எனினும், போரால் பொதுமக்களுக்கு ஏற்படும் இன்னல்களுக்குத் தீா்வு காண்பதற்கான பேச்சுவாா்த்தையைத் தொடர வேண்டும் என்று இருவரும் ஒப்புக்கொண்டோம் என்றாா் உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சா் டிமித்ரோ குலேபா.

உக்ரைன் பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக அந்த நாடு அனுப்பும் எந்த பிரதிநிதிகளுடனும் பேச்சுவாா்த்தை நடத்த ரஷியா தயாராக இருக்கிறது.

எனினும், சண்டை நிறுத்தம் மற்றும் பாதுகாப்பு வழித்தடங்கள் குறித்த இருதரப்பு பேச்சுவாா்த்தைக்கு பெலாரஸில் தற்போது பல சுற்றுகளாக நடைபெற்று வரும் பேச்சுவாா்த்தைக்கு மாற்று ஏதும் இல்லை என்று லாவ்ரோவ் கூறினார். 

இந்நிலையில், உக்ரைனில் அமெரிக்கா ரசாயன ஆயுதங்களை உருவாக்கி வருவதாகவும், உக்ரைன், அமெரிக்க கூலிப்படையின் உதவியுடன் ரசாயன ஆயுத தாக்குதலுக்கு தயாராகி வருவதாக ரஷியா குற்றம் சாட்டியது. 

உக்ரைனில் ரசாயன ஆயுத ஆய்வகங்கள் இல்லை. அதற்கு பதிலாக, உக்ரைன் மற்றும் பல முன்னாள் சோவியத் நாடுகளில் அமெரிக்க ஆதரவுடன் இயங்கும் பொது சுகாதாரம் மற்றும் கால்நடை சுகாதார ஆய்வகங்களே உள்ளன, அவை அரசாங்கத்தின் சுகாதார அமைச்சகத்திற்கு தொழில்நுட்ப ஆதரவை வழங்குகின்றன மற்றும் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையங்கள் என்று உக்ரைன் பதிலளித்தது.

இந்நிலையில், இது தொடர்பாக விசாரிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நேற்று நியூயார்க் நகரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஐ.நா.வுக்கான ரஷியா, அமெரிக்கா, இந்திய பிரதிநிதிகள் பங்கேற்றனர். 

அப்போது இந்தியாவின் நிரந்தர உறுப்பினர் டி.எஸ்.திருமூர்த்தி, உக்ரைனில் தற்போதைய நிலைமை குறித்து இந்தியா பலமுறை தனது கவலையை வெளிப்படுத்தி உள்ளது. ரஷியா மற்றும் உக்ரைன் இடையே நடந்து வரும் நேரடி பேச்சுவார்த்தைகளே போர் நிறுத்தத்திற்கு வழிவகுக்கும் என்று இந்தியா நம்புவதாகவும், தூதரக ரீதியான நடவடிக்கை மற்றும் பேச்சுவார்த்தையைத் தவிர வேறு வழியில்லை என்று திருமூர்த்தி கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com