இந்தோனேசியா, பிலிப்பின்ஸில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6 ஆக பதிவு

இன்று மேற்கு இந்தோனேசியா மற்றும் பிலிப்பின்ஸ் பகுதியில் நீருக்கடியில் நிலநடுக்கம் ஏற்பட்டதுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

இன்று காலை மேற்கு இந்தோனேசியா மற்றும் பிலிப்பின்ஸ் பகுதியில்  நிலநடுக்கம் ஏற்பட்டதுள்ளது. ஆனால் கடுமையான சேதம் எதுவும்  இல்லை மற்றும் சுனாமி எச்சரிக்கைகள் எதுவும் வெளியிடப்படவில்லை.

இந்தோனேசியாவில் ரிக்டர் அளவில் 6 ஆக பதிவாகியுள்ளது.

மேற்கு சுமத்ரா மாகாணத்தில் உள்ள பரியமன் நகருக்கு மேற்கே 169 கிலோமீட்டர் தொலைவில் 16 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தோனேசிய வானிலை மற்றும் புவி இயற்பியல் நிறுவனம், நிலநடுக்கம் மாகாணத்தின் பல பகுதிகளில் உணரப்பட்டதாகவும், ஆனால் சுனாமி ஆபத்து இல்லை என்றும் கூறியுள்ளது.

மேலும் பிலிப்பின்ஸ்  மற்றும் வெளி மாகாணங்களில் ரிக்டர் அளவு 4  ஆக பதிவாகியுள்ளது. ஆனால் எந்த சேதமும் ஏற்படவில்லை என்று பிலிப்பின்ஸ் எரிமலை மற்றும் நில அதிர்வு ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.


கடந்த மாதம் மட்டும் இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா மாகாணத்தில் 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதுள்ளது.  16 பேர் பலியாகினர் மற்றும் 400 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

மலேசியா மற்றும் சிங்கப்பூரில்  நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்றும் கட்டிடங்கள் சேதமடைந்தன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com