ரஷியா, உக்ரைன் 4-ம் சுற்று பேச்சுவார்த்தை: நடந்தது என்ன?

ரஷியா, உக்ரைன் இடையிலான 4-ம் சுற்று பேச்சுவார்த்தையைக் 'கடினமானது' என உக்ரைன் அதிபர் வொலொதிமீர் ஸெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
ரஷியா, உக்ரைன் 4-ம் சுற்று பேச்சுவார்த்தை: நடந்தது என்ன?


ரஷியா, உக்ரைன் இடையிலான 4-ம் சுற்று பேச்சுவார்த்தையைக் 'கடினமானது' என உக்ரைன் அதிபர் வொலொதிமீர் ஸெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கும் மேலாக ராணுவ நடவடிக்கைகளை நடத்தி வருகிறது. போர் நிறுத்தம் குறித்து இருதரப்புகளுக்கிடையே மூன்று சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றும் முடிவுக்கு வரவில்லை.

இந்த நிலையில், 4-ம் சுற்று பேச்சுவார்த்தை இன்று (திங்கள்கிழமை) மாலை நடைபெற்றது.

சிஎன்என் வெளியிட்ட தகவலின்படி பேச்சுவார்த்தை குறித்து விடியோ ஒன்றில் ஸெலென்ஸ்கி பேசியதாவது:

"கடினமான பேச்சுவார்த்தை தொடரும். அனைவரும் செய்திக்காகவே காத்திருக்கின்றனர். பேச்சுவார்த்தையின் முடிவு குறித்து மாலை அறிக்கை கிடைக்கும்."

உக்ரைன் சார்பாக ரஷியாவிடம் பேச்சுவார்த்தை நடத்துபவர் கூறுகையில், "4-ம் சுற்று பேச்சுவார்த்தை நேரடியாக நடைபெறாமல் காணொலியில் நடைபெறுகிறது. பேச்சுவார்த்தைக்கான உக்ரைன் குழுவினர் கீவ்வில் உள்ளனர்.

முன்னதாக, இருதரப்புக்கும் இடையிலான முதல் சுற்று பேச்சுவார்த்தை பெலாரஸில் பிப்ரவரி 28-ம் தேதி நடைபெற்றது. இரண்டாம் சுற்று பேச்சுவார்த்தை பெலாரஸில் மார்ச் 3-ம் தேதி நடைபெற்றது. மூன்றாம் சுற்று பேச்சுவார்த்தை பெலாரஸில் மார்ச் 7-ம் தேதி நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com