சீனாவில் மீண்டும் உருவாகிறதா கரோனா அலை?

சீனாவில் செவ்வாயன்று, கரோனா பாதித்தோர் எண்ணிக்கை, அதற்கு முந்தைய நாளை விடவும் இரண்டு மடங்கு கூடுதலாக பதிவாகியிருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் மீண்டும் உருவாகிறதா கரோனா அலை?
சீனாவில் மீண்டும் உருவாகிறதா கரோனா அலை?


பெய்ஜிங்: சீனாவில் செவ்வாயன்று, கரோனா பாதித்தோர் எண்ணிக்கை, அதற்கு முந்தைய நாளை விடவும் இரண்டு மடங்கு கூடுதலாக பதிவாகியிருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்நாட்டின் தேசிய சுகாதார அமைப்பு வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரத்தில், செவ்வாயன்று, புதிதாக கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 3,507 ஆக உள்ளது. இதுவே நேற்று 1.337 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

சீனாவில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்டிருக்கும் அனைத்து தீவிர நடவடிக்கைகளுக்கும் சவால் விடுக்கும் வகையில் மிக வேகமாக பரவும் ஸ்டீல்ஸ் ஒமிக்ரான் வகை கரோனா தற்போது சீனாவில் பரவி வருகிறது. கடந்த 2020ஆம் ஆண்டு சீனாவில் கரோனா தொற்று பரவிய பிறகு, அங்கு அதன் பரவலைக் கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தன. இந்தநிலையில் மீண்டும் கரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியது.

இதில் பெரும்பாலான பாதிப்பு சீனாவின் வடகிழக்கு நகரமான ஜிலின் மாகாணத்தில் பதிவாகியுள்ளது. இங்கு மட்டும் 2,601 புதிய கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதுபோல சீனாவில் பெய்ஜிங், ஷாங்காய், ஷென்ஷென் உள்ளிட்ட பல நகரங்களில்  கரோனா பரவல் சிறிய அளவில் அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com