உக்ரைன் போர்: உருளைக்கிழங்கு, வெங்காயம் தின்று உயிர்வாழும் ரஷிய வீரர்கள்

உக்ரைனில் போர்ப் பதற்றம் நிலவி வரும் நிலையில், அங்குள்ள ரஷிய வீரர்கள் உருளைக்கிழங்கு, வெங்காயம் மற்றும் ஊறுகாயை மட்டுமே தின்று போர் புரிந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் போர்: உருளைக்கிழங்கு, வெங்காயம் தின்று உயிர்வாழும் ரஷிய வீரர்கள்

உக்ரைனில் போர்ப் பதற்றம் நிலவி வரும் நிலையில், அங்குள்ள ரஷிய வீரர்கள் உருளைக்கிழங்கு, வெங்காயம் மற்றும் ஊறுகாயை மட்டுமே தின்று போர் புரிந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஷிய ராணுவ வீரர்கள் முகாமில், உணவு உண்ணும் பகுதியில் உக்ரைன் ராணுவம் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து அங்குள்ள பகுதிகளை சோதனையிட்டதில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.
 
உக்ரைன் ராணுவத்தினர் எடுத்துள்ள விடியோவில் ராணுவ வாகனங்கள் முழுக்க உருளைக்கிழங்கு, வெங்காயம் மற்றும் பாட்டில்களில் ஊறுகாய் மட்டுமே இருப்பது பதிவாகியுள்ளது.

நேட்டோ படையில் இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் நாட்டின் மீது ரஷிய ராணுவப் படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த மாதம் 24ஆம் தேதி முதல் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். 

உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவ் உள்பட கார்கீவ் உள்பட பல்வேறு முக்கிய நகரங்களை ரஷிய ராணுவத்தினர் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். 

உக்ரைன் வீரர்களும் ரஷிய ராணுவப் படைகளை நோக்கி பதில் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 14 ஆயிரத்துக்கும் அதிகமான ரஷிய வீரர்கள் உக்ரைன் தாக்குதலில் உயிரிழந்தனர். 

இது மட்டுமின்றி 81 விமானங்கள், 95 ஹெலிகாப்டர்கள், 404 பீரங்கிகள், 1,279 ஆயுதம் ஏந்திய வாகனங்கள், 640 வாகனங்கள், 3 போர்க் கப்பல்கள் உள்ளிட்டவை ரஷிய படை இழந்துள்ளதாக உக்ரைன் வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நேற்று ரஷிய ராணுவ முகாமின் உணவு உண்ணும் பகுதியில் உக்ரைன் படையினர் தாக்குதல் நடத்தினர். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் சோதனை நடத்தினர். 

அதில், ரஷிய வீரர்கள் உருளைக்கிழங்கு, வெங்காயம் மற்றும் ஊறுகாயை மட்டுமே தின்று போர் புரிந்து வருவது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக உக்ரைன் வீரர்கள் பதிவிட்ட விடியோவையும் உக்ரைன் ராணுவம் வெளியிட்டுள்ளது. 

அதில், ராணுவ வாகனங்கள் முழுவதும் மூட்டை மூட்டையாக உருளைக்கிழங்கும், வெங்காயம் மற்றும் பாட்டில்களில் ஊறுகாய் மட்டுமே இருப்பது தெரியவந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com