பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த சீனா முடிவு 

சீனாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை வெள்ளிக்கிழமை முதல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சீன நாட்டின் சிறந்த பொருளாதாரத் திட்டத்தை மேற்கோள்காட்டி சின்ஹுவா என்ற செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சீனா: சீனாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை வெள்ளிக்கிழமை முதல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சீன நாட்டின் சிறந்த பொருளாதாரத் திட்டத்தை மேற்கோள்காட்டி சின்ஹுவா என்ற செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத்தின்படி, பெட்ரோல் விலை டன்னுக்கு 750 யுவான் (USD 118.28) உயர்த்தப்படும் என்றும், டீசல் விலை 720 யுவான் உயர்த்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சின்ஹுவா கூறுவது போல் சீனா நேஷனல் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், சீனா பெட்ரோலியம்-கெமிக்கல் கார்ப்பரேஷன் மற்றும் சைனா நேஷனல் ஆஃப்ஷோர் ஆயில் கார்ப்பரேஷன் ஆகிய மூன்று பெரிய எண்ணெய் நிறுவனங்களை எண்ணெய் உற்பத்தியை பராமரிக்கவும், நிலையான விநியோகத்தை உறுதி செய்வதற்காக போக்குவரத்தை எளிதாக்கவும் சீன அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், உக்ரைனில் ரஷியாவின் இராணுவ நடவடிக்கைக்குப் பிறகு முதல் முறையாக, செவ்வாய்க்கிழமை எண்ணெய் விலை பீப்பாய்க்கு 100 அமெரிக்க டாலருக்கும் கீழே சரிந்தது என்று தி நியூயார்க் டைம்ஸ் கூறியுள்ளது.

மேலும், கரோனா தாக்கம் காரனமாக சீன மாகாணங்கள், பெய்ஜிங், ஷாங்காய் மற்றும் ஷென்சென் உள்ளிட்ட நகரங்கள் பூட்டப்பட்ட நிலையில் உள்ளன, நகரங்களுக்கு இடையிலான பயணம் துண்டிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com