கிரிப்டோகரன்சிக்கு ஒப்புதல் அளித்தது உக்ரைன்

உக்ரைன் அரசு கிரிப்டோகரன்சி பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கியுள்ளது.
கிரிப்டோகரன்சிக்கு ஒப்புதல் அளித்தது உக்ரைன்

உக்ரைன் அரசு கிரிப்டோகரன்சி பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கியுள்ளது.

உக்ரைனில் கடந்த பிப்ரவரி மாதம் மெய்நிகர் சொத்துக்களுக்கு(virtual assests) அனுமதி வழங்கும் சட்டவரைவு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் நேற்று (மார்ச்-16) அந்நாட்டின் அதிபர் ஸெலென்ஸ்கி ஒப்புதல் அளித்துள்ளார்.

விர்சுவல் சொத்துக்களில் பங்குச் சந்தை மற்றும் கிரிப்டோகரன்சி வணிகமும் அடக்கம் என்பதால் இனி உக்ரைனில் கிரிப்டோகரன்சி பயன்பாடுகளுக்கு அரசு அதிகாரப்பூர்வமாக அனுமதி வழங்க உள்ளது.

குறிப்பாக, ரஷியப் படைகள் உக்ரைன் மீது போர் தொடங்கியதிலிருந்து இதுவரை போரைச் சமாளிக்க நன்கொடையாக உக்ரைனுக்கு ரூ.750 கோடி வரை(100 மில்லியன் டாலர்கள்) கிரிப்டோகரன்சிகள் கிடைத்துள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று புதன்கிழமை கிரிப்டோகரன்சியை சட்டப்பூர்வமாக்கும் ஒப்பந்தத்தில் உக்ரைன் அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி ஒப்புதல் அளித்துள்ளார்.

இதன் மூலம், இனி வரும் காலங்களில் உக்ரைனில் கிரிப்டோகரன்சி வணிகத்தில் ஈடுபடுவோருக்கென வங்கிக் கணக்குகளும் உருவாக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com