ரஷியப் படைகள் ராக்கெட் தாக்குதல்: உக்ரைனின் பிரபல நடிகை பலி

உக்ரைன் மீது ரஷியப் படைகளின் ராக்கெட் தாக்குதலில் உக்ரைனின் பிரபல நடிகை ஒக்சானா ஸ்வெட்ஸ் உயிரிழந்தார். 
உக்ரைனின் பிரபல நடிகை ஒக்சானா ஸ்வெட்ஸ்
உக்ரைனின் பிரபல நடிகை ஒக்சானா ஸ்வெட்ஸ்


உக்ரைன் மீது ரஷியப் படைகளின் ராக்கெட் தாக்குதலில் உக்ரைனின் பிரபல நடிகை ஒக்சானா ஸ்வெட்ஸ் உயிரிழந்தார். 

கிழக்கு உக்ரைனில் தங்களுக்கு ஆதரவான கிளா்ச்சியாளா்களின் கட்டுப்பாட்டில் உள்ள டொனட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ் பகுதிகளை தனி நாடுகளாக அறிவித்த ரஷியா, அந்தப் பகுதி மக்களை உக்ரைன் ராணுவத்திடமிருந்து பாதுகாப்பதாகக் கூறி அங்கு தனது படைகளை ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி அனுப்பியது.

அதன் தொடா்ச்சியாக, தலைநகா் கீவ் உள்ளிட்ட பகுதிகளை சுற்றிவளைத்து ரஷியப் படை தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் பொதுமக்கள் உள்பட பலா் உயிரிழந்து வருகின்றனா்.

இதற்கு உலகம் முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. உக்ரைன் மீதான போருக்கு எதிா்ப்பு தெரிவித்து ரஷியா்களே கண்டன ஆா்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனா்.

உக்ரைன் போரின் எதிரொலியாக ரஷியா மீது அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் விதித்துள்ள பொருளாதாரத் தடைகளால் விலைவாசி, உணவுப் பற்றாக்குறை போன்ற நெருக்கடிகளை ரஷிய மக்கள் சந்திக்க நேரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இதனிடையே உக்ரைன் மீதான போருக்கு பலா் எதிா்ப்பு தெரிவித்து வருகிறாா்கள். இது தேசத் துரோகமாகும்.

துரோகிகள் யாா், தேசப் பற்றுள்ளவா்கள் யாா் என்பதை யாராலும், குறிப்பாக ரஷியா்களால் எளிதில் தெரிந்துகொள்ள முடியும்.

தவறி வாயில் நுழைந்துவிட்ட கொசுவைப் போல் துரோகிகளை ரஷியா்கள் வெளியேற்றி சுத்தம் செய்யவேண்டும்.

மேற்கத்திய நாடுகளின் கைப்பாவையாக போா் எதிா்ப்பாளா்கள் செயல்படுகிறாா்கள். ரஷியாவின் அழிவைத் தவிர அந்த நாடுகளுக்கு வேறேந்த நோக்கமும் இல்லை.

நமது நாட்டின் வலிமை, ஒருமைப்பாடு, எந்தச் சவாலையும் எதிா்கொள்ளும் திறனை மேம்படுத்த வேண்டுமென்றால் துரோகிகளிடமிருந்து நாடு சுத்தப்படுத்தப்படவேண்டும் என்று வியாழக்கிழமை தொலைக்காட்சியில் ஆற்றிய உரையில் புதின் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், கீவ் நகரில் ஒரு குடியிருப்பு கட்டடத்தின் மீது ரஷியப் படைகள் ராக்கெட் குண்டுகளை ஏவி தாக்கியதில், கட்டடத்தில் இருந்து 67 வயதான பழம்பெரும் பிரபல நடிகை ஒக்சான ஸ்வெட்ஸ் பலியானார். 

இவர் உக்ரைனின் உயரிய திரையுல விருதுகளை பெற்றுள்ளார்.

உக்ரைனிய ராணுவ உள்கட்டமைப்பை மட்டுமே குறிவைத்து இந்த சிறப்பு தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஐ.நா மனித உரிமை ஆணையத்தின் அறிவிப்பின்படி, உக்ரைனில் ரஷியப் படைகள் தாக்குதல் தொடங்கியதில் இருந்து பொதுமக்களில் சுமார் 600 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 1,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com