
பிரேசிலில் டெலிகிராம் செயலிக்குத் தடை விதித்து அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தவறான தகவல்களை பரப்பும் கணக்குகளை முடக்கவும் நாட்டின் சட்டங்களுக்கு இணங்கவும் நீதித்துறை உத்தரவிட்டதை டெலிகிராம் நிறுவனம் மறுத்த நிலையில், இது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதி அலெக்ஸாண்ட்ரே டி மோரேஸ், பிரேசிலில் டெலிகிராம் செயலிக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளார்.
டெலிகிராம் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பாவெல் துரோவ் நிறுவனத்தின் அலட்சியத்திற்கு நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டதுடன் தீர்ப்பை சில நாள்களுக்கு ஒத்திவைக்குமாறு கூறியுள்ளார். ஆனால், நீதிமன்றம் அதனை மறுத்துள்ளது.
அந்நாட்டில் வாட்ஸ்ஆப், கூகுள், ட்விட்டர் உள்ளிட்ட நிறுவனங்கள் நாட்டின் சட்டங்களை பின்பற்றுவதாகவும் அதேநேரத்தில் டெலிகிராம் அவற்றை பின்பற்றத் தவறுவதாகவும் வலதுசாரி தலைவர்கள் அளித்த குற்றச்சாட்டின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.