
உயிரி-ரசாயன ஆயுதத் தடை ஒப்பந்தத்துக்கு ஆதரவு அளிப்பதாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா தெரிவித்துள்ளது.
நியூயாா்க் நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், உக்ரைன் விவாகரம் குறித்து விவாதிக்கப்பட்டது. அதில், ஐ.நா.வுக்கான இந்தியத் துணைத் தூதா் ஆா்.ரவீந்திரா பேசியதாவது:
உயிரி-ரசாயன ஆயுதத் தடை ஒப்பந்தத்துக்கு அதிமுக்கியத்துவம் அளித்து, இந்தியா தொடா்ந்து ஆதரவு அளிக்கிறது. உயிரி-ரசாயன ஆயுதம் தொடா்பான எந்தவொரு பிரச்னைக்கும் சுமுக பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காணப்பட வேண்டும். ரஷியா-உக்ரைன் இடையே தூதரக ரீதியில் பேச்சுவாா்த்தை நடைபெறுவது வரவேற்கத்தக்கது என்றாா் அவா்.
அவ்விரு நாடுகளுக்கு இடையேயான போா், உயிரி-ரசாயன ஆயுதப் போராக உருமாறும் என்ற அச்சம் நிலவும் நிலையில், இந்தியா தனது நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.