
செயற்கைக்கோள் புகைப்படங்கள்
உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு தொடங்கி நான்கு வாரங்களான நிலையில், உக்ரைன் நகரங்கள் மீது ரஷிய விமானப்படை மற்றும் ராணுவம் எந்தளவுக்கு தாக்குதல் நடத்தி அழித்துள்ளது என்பது தற்போது வெளியான செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
உக்ரைன் போரின் மையப்புள்ளியாக உள்ள துறைமுக நகரமான மரியுபோலில் மக்கள் தங்கியிருக்கும் வீடுகள், அடுக்குமாடி கட்டிடங்கள், கடைகள் ஆகியவை எந்தளவுக்கு சேதத்தை சந்தித்துள்ளது என்பதை இந்த புகைப்படங்கள் தெரியப்படுத்தியுள்ளது. மாக்சர் டெக்னாலஜிஸ் என்ற அமெரிக்காவின் தனியார் நிறுவனம் இந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.
கிவ் நகரத்திலும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் விமானப்படையும் ராணுவமும் எந்தளவுக்கு தாக்குதல் நடத்தியுள்ளது என்பதும் இதன் மூலம் தெரியவந்துள்ளது. நகரத்தின் வடமேற்கில் உள்ள நகரங்கள் மற்றும் ஹோஸ்டோமெல், மோசுன், இர்பின் ஆகிய பகுதிகளில் மளிகை கடைகள், வீடுகள், குடியிருப்பு கட்டிடங்கள் மற்றும் பிற உள்கட்டமைப்பு வசதிகள் கடுமையாக சேதப்படுத்தப்பட்டிருப்பதை இந்த புகைப்படங்களில் காணலாம்.