ரஷியப் படைகள் தாக்குதலில் மிகப்பெரிய உருக்காலை மூடல்

ரஷியப் படைகளின் தாக்குதலில் பெரும் சேதமடைந்ததால் உக்ரைனில் மிகப்பெரிய இரும்பு உருக்காலை மூடப்பட்டுள்ள நிலையில், உள்ளூர் அதிகாரிகள் மேற்கத்திய நாடுகளின் உதவியை நாடியுள்ளனர்.
ரஷியப் படைகள் தாக்குதலில் மிகப்பெரிய உருக்காலை மூடல்


ரஷியப் படைகளின் தாக்குதலில் பெரும் சேதமடைந்ததால் உக்ரைனில் மிகப்பெரிய இரும்பு உருக்காலை மூடப்பட்டுள்ள நிலையில், உள்ளூர் அதிகாரிகள் மேற்கத்திய நாடுகளின் உதவியை நாடியுள்ளனர்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் மூன்று வாரங்களுக்கும் மேலாக உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது ரஷியப் படைகள் தாக்குதலை நடத்தி வருகிறது. 

ரஷியப் படைகளின் தாக்குதலால், "குழந்தைகள், முதியவர்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள். நகரம் அழிக்கப்பட்டு வருகிறது," என்று இடிபாடுகள் நிறைந்த தெருவில் இருந்து மேற்கத்திய தலைவர்களுக்கு மரியுபோல் காவல்துறை அதிகாரி மைக்கேலின் பேசிய  விடியோ பதிவு ஒன்று வெளியாகி உள்ளது. 

உக்ரைனிய ராணுவ அதிகாரியின் தகவல்படி, வெள்ளிக்கிழமை தெற்கு நகரமான மைகோலேவில் உள்ள கடற்படையினர் முகாம்கள் மீது ராக்கெட் தாக்குதலில் ஈடுபட்டனர். அப்போது 40 கடற்படையினரை கொல்லப்பட்டுள்ளதாகவும், தாக்குதல் நடந்த போது முகாம்களுக்குள் எத்தனை பேர் இந்தனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை. மீட்புப் படையினர் இடிபாடுகளில் தப்பியவர்களைத் தேடிக்கொண்டிருந்தனர். இது உக்ரைனியப் படைகள் மீதான தாக்குதலில் மிக மோசமான தாக்குதல்களில் ஒன்று என்று உக்ரைனியை ராணுவர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். தாக்குதல் நடந்த போது கடற்படையினர் உறங்கிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், துறைமுக நகரமான மரியுபோலை அசோவ் கடலில் இருந்து ரஷியப் படைகள் துண்டித்துவிட்ட நிலையில், மரியுபோல் நகரில் உள்ள ஐரோப்பாவின் மிகப்பெரிய உருக்கு ஆலையான அசோவ் இரும்பு உருக்கு ஆலை மீது ரஷியப் படைகள் தாக்கியது. ரஷியப் படைகளின் தாக்குதலில் உருக்கு ஆலை பெருமளவில் சேதமடைந்துள்ளதாகவும், "ஐரோப்பாவில் உள்ள மிகப்பெரிய இரும்பு உருக்கு ஆலைகளில் ஒன்று உண்மையில் அழிக்கப்பட்டு வருகிறது" என்று உக்ரைன் உள்துறை அமைச்சரின் ஆலோசகர் வாடிம் டெனிசென்கோ தெரிவித்துள்ளார். 

ரஷியப் படைகளை குறைந்தபட்சம் 100 கிமீ தொலைவில் உக்ரைனியப் படைகள் போராடி வருவதாக கூறினார்.

இதில், மரியுபோல் நகரவாசிகளை அங்கிருந்து ரஷியப் பகுதிக்கு வெளியேற்றி வருவதாகவும், குடிநீர், மின்சாரம் கிடைப்பதைத் தடுத்து வருவதாகவும், பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் அங்கிருந்து வெளியேறியதாக நகரசபை குற்றம்சாட்டியுள்ளது. ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் வெளியாகவில்லை. 

ரஷியப் படைகளின் தாக்குதலில் இரும்பு உருக்கு ஆலை பெரும் சேதமடைந்துள்ளதால் மூடப்பட்டுள்ளதாகவும், இதனால் பொருளாதார பேரிழப்பும், சுற்றுச்சூழல் அழிவும் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள உக்ரைனியே அதிகாரிகள் மேற்கத்திய நாடுகளின் உதவியை நாடியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com