ரஷியாவுக்கு ஆதரவாக உக்ரைன் போரில் குதிக்கும் மூன்றாவது நாடு?

சிரிய போரில் கிடைத்த நிபுணத்துவத்தை பயன்படுத்தி ரஷியாவுக்கு உதவ தயாராக உள்ளதாக துணை ராணுவ தேசிய பாதுகாப்பு படைகளின் தளபதி தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

நட்பு நாடான ரஷியாவுக்கு ஆதரவாக போரிடும் வகையில் உக்ரைனுக்கு படைகளை அனுப்ப தயாராக இருப்பதாக துணை ராணுவத்தின் தளபதிகள் இருவர் தெரிவித்துள்ளனர். ஆனால், இந்த விவகாரத்தில் உத்தரவுகள் இன்னும் கிடைக்கவில்லை என்றும் அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

இதுகுறித்து விரிவாக பேசிய துணை ராணுவ தேசிய பாதுகாப்பு படையின் தளபதி நபி அப்துல்லா, "சிரிய போரில் கிடைத்த நிபுணத்துவத்தை இந்த போரில் பயன்படுத்தி ரஷியாவுக்கு உதவ தயாராக உள்ளோம். சிரிய மற்றும் ரஷிய தலைமையிடமிருந்து எங்களுக்கு உத்தரவுகள் கிடைத்தவுடன், இந்த நேர்மையான போரில் சண்டை செய்வோம். 

நாங்கள் இந்தப் போருக்குப் பயப்பட மாட்டோம். உத்தரவு கிடைத்தவுடன் அங்கு சென்று போரில் கலந்து கொள்ள தயாராக இருக்கிறோம். அவர்கள் பார்த்திராததை நாங்கள் அவர்களுக்குக் காண்பிப்போம். தெருக்களில் போர்களை நடத்துவோம். சிரிய போர்களின்போது பயங்கரவாதிகளைத் தோற்கடிக்க உதவிய எங்கள் நிபுணத்துவத்தை பயன்படுத்துவோம்" என்றார்.
 
மத்திய கிழக்கிலிருந்து 16,000 தன்னார்வலர்களை உக்ரைனுக்கு அனுப்பு ரஷிய அதிபர் புதின் அனுமதி வழங்கி நான்கு நாள்களான நிலையில், அப்துல்லா இப்படி கருத்து தெரிவித்துள்ளார். 

தேசிய பாதுகாப்பு படை வீரர்களுக்கு உத்தரவுகளை பிறப்பிக்க ரஷிய திட்டமிட்டுள்ளதா? அல்லது தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் யாரேனும் இதற்காக சேர்க்கப்பட்டுள்ளனரா? என கேட்கப்பட்ட கேள்விக்கு ரஷிய பாதுகாப்புத்துறை அமைச்சகம் சார்பில் பதில் அளிக்கவில்லை. அதேபோல, சிரிய தகவல் அமைச்சகம் மற்றும் ராணுவம் சார்பிலும் இதுகுறித்து பதில் அளிக்கப்படவில்லை. 

மத்திய கிழக்கில் ரஷியாவின் நெருக்கமான கூட்டு நாடாக சிரியா உள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு, சிரிய போரின்போது ரஷியாவின் உதவியால்தான் சிரிய அதிபர் பஷர் அல்-அசாத், கிளர்ச்சி படைகளை தோற்கடித்தார். இந்த போரின் தொடக்கத்தில், அசாத்துக்கு ஆதரவான ராணுவ படையிலிருந்து தேசிய பாதுகாப்பு படை தோற்றுவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com