சீன விமான விபத்து: 74% விமானங்கள் ரத்து

சீன விமான விபத்தில் 132 பயணிகளும் பலியானதை அடுத்து பயணிகள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்சத்தால் நேற்று செவ்வாய்க்கிழமை சீனாவில் 74 சதவிகித விமானங்கள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. 
சீன விமான விபத்து: 74% விமானங்கள் ரத்து

சீன விமான விபத்தில் 132 பயணிகளும் பலியானதை அடுத்து பயணிகள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்சத்தால் நேற்று செவ்வாய்க்கிழமை சீனாவில் 74 சதவிகித விமானங்கள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. 

சீனாவின் தென்மேற்கு மாகாணமான யுன்னான் தலைநகா் குன்மிங்கிலிருந்து தொழில் மையமாக விளங்கும் குவாங்ஜோ நோக்கிச் சென்ற போயிங் 737 ரக விமானம், ஹுஜோ நகரத்துக்கு உள்பட்ட டெங்ஷியான் மலைப் பகுதியில் திங்கள்கிழமை உள்ளூா் நேரப்படி மதியம் 2.20 மணிக்கு விழுந்து விபத்துக்குள்ளானது. அந்த விமானத்தில் 123 பயணிகளும், 9 ஊழியா்களும் பயணித்தனா்.

இதைத் தொடா்ந்து, விபத்து நடைபெற்ற இடத்தில் 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை மீட்புப் பணி நடைபெற்றது. 

விமானம் விபத்துக்குள்ளான பகுதியிலிருந்து சேறுபடிந்த பணப் பைகள், ஏடிஎம் அட்டைகள், பயணிகளின் அலுவலக அடையாள அட்டைகளை மட்டுமே மீட்க முடிந்ததாகவும், பயணிகளில் ஒருவா்கூட உயிருடன் மீட்கப்படவில்லை. 

இதுதவிர விமான தரவுகளையும் விமானிகளின் உரையாடலையும் பதிவுசெய்யும் கருப்புப் பெட்டியை மீட்பதில் அதிகாரிகளுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும், இந்தப் பணியில் ட்ரோன் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக அதிகாரி ஒருவா் கூறியதாக சீனாவின் ஜின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

சைனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் கார்ப்பரேஷன் ஜெட் விமானம் 29,000 அடி (8,840 மீட்டர்) உயரத்தில் இருந்து விமானம் விபத்துக்குள்ளானது தொழில்நுட்ப நிபுணர்களை திகைக்க வைக்கிறது, மேலும் விபத்து குறித்து சீனாவின் விசாரணைக்கு "எங்கள் தொழில்நுட்ப நிபுணர்களின் முழு ஆதரவையும்" வழங்குவதாக போயிங் நிறுவனம் கூறியுள்ளது. . 

இந்நிலையில், போயிங் 737 ரக விமானம், ஹுஜோ நகரத்துக்கு உள்பட்ட டெங்ஷியான் மலைப் பகுதியில் விழுந்து நொறுங்கியதில் விமானத்தில் பயணித்த 133 பேரும் உயிரிழந்ததை அடுத்து பயணிகள் மத்தியில் எழுந்த அச்சத்தால் நேற்று செவ்வாய்க்கிழமை(மார்.22)  சீனாவில் திட்டமிடப்பட்ட 11,800 விமானங்களில் 75 சதவிகித விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. 

பொதுவாக உலகின் பரபரப்பான உள்நாட்டு வழித்தடங்களில் ஒன்றான பெய்ஜிங்-ஷாங்காங் இடையே 5 விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டுள்ளது. பெய்ஜிங்கில் இருந்து ஷாங்காங்கிற்கு 34 விமானங்களில் ஐந்து மட்டுமே இயக்க திட்டமிடப்பட்டது.

ஏற்கனவே, சீன விமானங்களின் சேவை பயணம் கரோனா கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று செவ்வாய்க்கிழமை 75 சதவிகித விமான ரத்து செய்யப்பட்டிருப்பது இந்த ஆண்டு மிக அதிகமாக விமான ரத்து என்றும், மாத தொடக்கத்தில் இரு மடங்காகவும் இருந்தது என்று ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை பட்டியலிடப்பட்ட ஷாங்காய் ஹாங்கியாவோ விமான நிலையத்திலிருந்து பெய்ஜிங்கிற்கு 35 விமானங்களில் இரண்டு காலை இயக்கப்பட்டன, மேலும் மூன்று பறக்கவிருந்தன. மற்றவை அனைத்தும் அகற்றப்பட்டன. பெய்ஜிங்கில் இருந்து ஷாங்காயின் உள்நாட்டு மையத்திற்கு 34 விமானங்களில் ஐந்து மட்டுமே இயக்க திட்டமிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com