பிரச்னைக்கு தீர்வு எட்டிய பின் சீன பயணம்: நேர்மறையாக பேசிய அஜித் தோவல்

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இந்திய, சீன நாடுகளுக்கிடையே நடைபெற்ற எல்லை பிரச்னைக்கு பிறகு இரு நாட்டு உயர் நிலை தலைவர்களும் நேரில் சந்தித்து கொள்வது இதுவே முதல்முறை.
அஜித் தோவல்
அஜித் தோவல்

பிரச்னைக்குரிய எல்லை பகுதியில் பாதுகாப்பு படைகளை விரைவாகவும் முழுவதுமாகவும் திரும்ப பெற்று கொள்வதே இருநாடுகளிக்கிடையேயான உறவை இயல்பு நிலைக்கு மீண்டும் எடுத்து செல்வதில் முக்கிய பங்காற்றும் என தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்துள்ளார்.

சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ நேற்று மாலை தில்லிக்கு வந்தடைந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இந்திய, சீன நாடுகளுக்கிடையே நடைபெற்ற எல்லை பிரச்னைக்கு பிறகு இரு நாட்டு உயர் நிலை தலைவர்களும் நேரில் சந்தித்து கொள்வது இதுவே முதல்முறை.

அப்போது வாங் யீடம் பேசிய தோவல், "பேச்சுவார்த்தையை இயல்பு நிலைக்கு எடுத்து செல்ல இடையூறுகளை நீக்க வேண்டும். இரு நாட்டு பரஸ்பர மற்றும் சம அளவிலான பாதுகாப்பை பாதிக்காதவாறு செயல்பட கூடாது. தற்போதுள்ள சூழல் தொடர்ந்தால் அது பரஸ்பர நலனுக்கு உகந்ததாக இருக்காது. அமைதியை நிலைநாட்டுவதன் மூலம் நம்பிக்கையை கட்டமைத்து இரு நாட்டு உறவை முன்னோக்கி எடுத்து செல்வதற்கான சூழலை அமைக்க முடியும். 

அந்த அமைதியை நிலைநாட்ட ராணுவ ரீதியாகவும் தூதரக ரீதியாகவும் எதிர்மறையான பேச்சுவார்த்தை மேற்கொள்வது அவசியம். இயல்பு நிலைக்கு நம்மை இது மட்டுமே அழைத்து செல்லும்" என்றார்.

இதையடுத்து, சீனாவுக்கு வரும்படி சீன உயர் நிலைக்குழு தோவலுக்கு அழைப்பு விடுத்தது. இதற்கு எதிர்மறையாக பதில் அளித்த தோவல், இரு நாடுகளுக்கிடையே நிலவும் பிரச்னைக்கு தீர்வு எட்டிய உடன் சீனாவிற்கு வருவதாக உறுதி அளித்தார். பின்னர், தில்லி ஹைதராபாத் மாளிகையில் வாங் யீ ஜெய்சங்களை சந்தித்து பேசினார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com