சீனாவில் வேகமெடுக்கும் கரோனா: புதிதாக 1,280 பேர் பாதிப்பு

சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,280 பேருக்கு புதிதாக கரோனா தொற்று பதிவாகியுள்ளதாக தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. 
சீனாவில் வேகமெடுக்கும் கரோனா: புதிதாக 1,280 பேர் பாதிப்பு

சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,280 பேருக்கு புதிதாக கரோனா தொற்று பதிவாகியுள்ளதாக தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. 

சுகாதார ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 

சீனாவிலிருந்து உலகம் முழுவதும் பரவிய கரோனா தொற்றால் கடந்த 2 ஆண்டுகளில் 48 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டும் 60 லட்சம் பேர் தொற்றின் தீவிரத்தால் பலியாகியுள்ளனர்.

புதிதாக தொற்று பரவியதில், ஜிலின் மாகாணத்தில் 1,122, ஷாங்காயில் 38, தியான்ஜினில் 35, ஹெபேயில் 19, மற்றும் லியோனிங்கில் 14 எனவும் பதிவாகியுள்ளது. மீதமுள்ள வழக்குகள் ஹீலாங்ஜியாங் மற்றும் கன்சு உள்பட 15 மாகாண அளவிலான பிராந்தியங்களில் பதிவாகியுள்ளன.

இதற்கிடையில், 20 க்கும் மேற்பட்ட மாகாணங்கள் மற்றும் நகரங்களில் பயணத் தடைகள் மற்றும் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. 

ஜிலின், ஹெபெய், குவாங்டாங், ஷாங்காய் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மாகாணங்கள் மற்றும் நகரங்களில் நிலைமை மோசமடைந்துள்ளது.

சீனாவில், மீண்டும் அதிகரிக்கத் தொடங்கிய கரோனா தொற்று உலக நாடுகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com