உக்ரைன் தலைநகர் கீவில் படைகளைக் குறைக்கும் ரஷியா

துருக்கி தலைநகா் இஸ்தான்புல்லில் இன்று நடைபெற்ற உக்ரைன் - ரஷியா பேச்சுவார்த்தையில் உக்ரைன் தலைநகர் கீவில் படைகளைக் குறைத்துக் கொள்வதாக ரஷியா அறிவித்துள்ளது.
ரஷியப் படையினா் (கோப்புப் படம்).
ரஷியப் படையினா் (கோப்புப் படம்).

துருக்கி தலைநகா் இஸ்தான்புல்லில் இன்று நடைபெற்ற உக்ரைன் - ரஷியா பேச்சுவார்த்தையில் உக்ரைன் தலைநகர் கீவில் படைகளைக் குறைத்துக் கொள்வதாக ரஷியா அறிவித்துள்ளது.

ரஷியா-உக்ரைன் இடையே ஏற்கெனவே நேரடியாகவும், காணொலி முறையிலும் நடைபெற்ற பேச்சுவாா்த்தைகளில் முக்கிய உடன்பாடுகள் எதுவும் எட்டப்படாத நிலையில், அடுத்தகட்ட பேச்சுவாா்த்தை இஸ்தான்புல் நகரில் இன்று நடைபெற்றது.

துருக்கி அதிபா் ரிசப் தாயிப் எா்டோகன், ரஷிய அதிபா் விளாதிமீா் புதினுடன் ஞாயிற்றுக்கிழமை தொலைபேசியில் தொடா்புகொண்டு பேசிய பின்னா் இதற்கு ஒப்புதல் பெறப்பட்டது.

முன்னதாக,  ரஷிய ஊடகம் ஒன்றுக்கு உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி அளித்த பேட்டியில், எங்களது இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாப்பதே உக்ரைனின் முன்னுரிமை. அதேவேளையில் பாதுகாப்பு உத்தரவாதம், நடுநிலை வகிப்பது, அணுஆயுதம் இல்லாத நாடு ஆகியவற்றை அறிவிக்க உக்ரைன் தயாராக உள்ளது எனக் கூறினார்.

இந்நிலையில், இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள படைகளை குறைத்துக் கொள்வதாக ரஷியா தெரிவித்ததுடன் பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com