மக்கள் அதிருப்தி: கோத்தபய ராஜபட்சவின் முகநூலில் கருத்திடும் வசதி முடக்கம்

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்சவின் முகநூல் பக்கத்தில், பொதுமக்கள் கருத்துகள் பதிவிடும் வசதி முடக்கி வைக்கப்பட்டுள்ளது.
கோத்தபய ராஜபட்ச (கோப்புப் படம்)
கோத்தபய ராஜபட்ச (கோப்புப் படம்)


இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்சவின் முகநூல் பக்கத்தில், பொதுமக்கள் கருத்துகள் பதிவிடும் வசதி முடக்கி வைக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு, அத்தியாவசியப் பொருள்கள் கூட வாங்க முடியாமல் மக்கள் அவதியுறும் நிலையில், இலங்கை ஆட்சியாளர்கள் மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

டீசல் பற்றாக்குறை காரணமாக இலங்கையில் 10 மணி நேர மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே மருந்து தட்டுப்பாட்டால் அறுவை சிகிச்சைகள் நிறுத்தப்பட்டு, டீசல் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

உணவு பொருள்கள் விண்ணை முட்டும் விலையில் விற்பதால் அதனை வாங்க முடியாமலும், எரிவாயு உருளை உள்ளிட்ட பொருள்களை வாங்க நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், அதிபர் கோத்தபய ராஜபட்சவின் முகநூல் பக்கத்தில், அதிபல் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் குறித்த தகவல்கள் புகைப்படங்கள் வழக்கம் போல நாள்தோறும் பதிவேற்றம் செய்யப்பட்டாலும், மக்கள் கருத்துகளை பதிவிடும் வசதி மட்டும் அரசால் முடக்கிவைக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com