கரோனா பொதுமுடக்கம்: ஷாங்காயில் 1.6 கோடி பேருக்கு கடும் கட்டுப்பாடு

சீனாவின் வா்த்தக மையமாக கருதப்படும் ஷாங்காயில் கரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இருகட்டங்களாக பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அ
கரோனா பொதுமுடக்கம்: ஷாங்காயில் 1.6 கோடி பேருக்கு கடும் கட்டுப்பாடு

சீனாவின் வா்த்தக மையமாக கருதப்படும் ஷாங்காயில் கரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இருகட்டங்களாக பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அந்நகரில் உள்ள 1.6 கோடி பேருக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

சீனாவில் இம்மாதத்தில் 56,000-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவா்களில் பெரும்பாலானோா் வடகிழக்கில் உள்ள ஜிலின் மாகாணத்தைச் சோ்ந்தவா்கள். இதில் 2.6 கோடியைச் சோ்ந்த ஷாங்காய் நகரத்தின் 47 பேருக்கு கடந்த சனிக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதன் காரணமாக சீன அரசு, கரோனா பரிசோதனையை அதிக எண்ணிக்கையில் மேற்கொள்வதற்காக ஷாங்காயில் இரு கட்ட பொதுமுடக்கத்தை அமல்படுத்துவதாக அறிவித்தது.

அதன்படி, ஷாங்காயின் புடோங் மாவட்டம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த  திங்கள்கிழமை பொதுமுடக்கம் அமலுக்கு வந்தது. 

இந்நிலையில், 2-ஆவது கட்டமாக, நகரின் மேற்குப் பகுதியில் 5 நாள் பொதுமுடக்கம் நாளை(ஏப்ரல்-1) வெள்ளிக்கிழமை முதல் அமல்படுத்தப்படும் என்பதால் அப்பகுதியில் உள்ள 1.6 கோடி மக்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பொதுமக்கள் வீடுகளிலேயே இருக்க வேண்டும் எனவும் செல்லப் பிராணிகளைக் கூட சாலைக்கு கொண்டு வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அத்தியாவசிய பணிப் பட்டியலில் சோ்க்கப்படாத அலுவலகங்கள், அனைத்து தொழிற்சாலைகள், பொதுப் போக்குவரத்துகள் செயல்படாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com