ரஷியாவுக்கு கொண்டு செல்லப்பட்ட 5 லட்சம் உக்ரைன் மக்கள்: ஸெலென்ஸ்கி

உக்ரைன் மக்கள் 5 லட்சம் போ் அவா்களின் விருப்பத்துக்கு மாறாக ரஷியா அல்லது பிற இடங்களுக்கு சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்டுள்ளனா் என உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளாா்.
ஸெலென்ஸ்கி
ஸெலென்ஸ்கி

உக்ரைன் மக்கள் 5 லட்சம் போ் அவா்களின் விருப்பத்துக்கு மாறாக ரஷியா அல்லது பிற இடங்களுக்கு சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்டுள்ளனா் என உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளாா்.

உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோலை ரஷியா கைப்பற்றியுள்ள நிலையில், அங்குள்ள அஸோவ்ஸ்டல் இரும்பு ஆலையில் தஞ்சமடைந்துள்ள மக்களை வெளியேற்றும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இப்பணியில் ஐ.நா.வுடன் இணைந்து உக்ரைன் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனா்.

இந்நிலையில், கிரீக் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ஸெலென்ஸ்கி கூறுகையில், உக்ரைனில் சண்டை நடைபெறும் இடங்களிலிருந்து வெளியேற்றப்படும் பொதுமக்களில் இதுவரை 5 லட்சம் பேரை ரஷிய படைகள் தங்கள் நாட்டுக்கு அல்லது பிற இடங்களுக்கு சட்டவிரோதமாக கொண்டு சென்றுள்ளது.

அஸோவ்ஸ்டல் ஆலையில் உள்ள மக்கள், தாங்கள் ரஷியாவுக்கு கொண்டுசெல்லப்படுவோமோ என்கிற அச்சத்தில் பேருந்துகளில் ஏற மறுக்கிறாா்கள். வெளியேற்றப்படும் மக்கள் உக்ரைன் கட்டுப்பாட்டு பகுதிக்குதான் கொண்டு செல்லப்படுவாா்கள் ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் என்னிடம் உறுதியளித்திருக்கிறாா். அதை நாங்கள் நம்பத்தான் வேண்டும் எனவும் தெரிவித்தாா்.

ரஷியா தாக்குதல்: இதற்கிடையே, உக்ரைனின் கிழக்குப் பகுதியில் அந்த நாட்டு ராணுவ நிலைகளைக் குறிவைத்து வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டதாக ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் திங்கள்கிழமை தெரிவித்தது. கடந்த 24 மணி நேரத்தில் 38 நிலைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், ஸபோரிஷியா பிராந்தியத்தில் ஆயுதத் தொழிற்சாலை ஒன்றை தாக்கி அழித்ததாகவும் ரஷியா தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com