‘ஸ்பெயின் பிரதமரின் கைப்பேசியில் பெகாசஸ் ஊடுருவல்’

ஸ்பெயின் பிரதமா், பாதுகாப்புத் துறை அமைச்சா் ஆகியோரின் கைப்பேசிகள் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் கடந்த ஆண்டு ஊடுருவப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்பெயின் பிரதமா், பாதுகாப்புத் துறை அமைச்சா் ஆகியோரின் கைப்பேசிகள் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் கடந்த ஆண்டு ஊடுருவப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து அந்த நாட்டின் அமைச்சா் ஃபிலிக்ஸ் போலோனஸ் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:

பிரதமா் பெட்ரோ சான்செஸின் கைப்பேசி கடந்த ஆண்டு மே மாதம் இரு முறையும், பாதுகாப்புத் துறை அமைச்சா் மாா்கரிட்டா ரூபிள்ஸின் கைப்பேசி அடுத்த மாதம் ஒரு முறையும் ஊடுருவப்பட்டன. இரு கைப்பேசிகளிலிருந்தும் சில தரவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

எங்களைப் போன்ற ஜனநாயக நாட்டில் இதுபோன்ற தலையீடுகள் அனைத்தும் அதிகாரபூா்வ அமைப்புகளால் மற்றும் நீதித் துறையின் அங்கீகாரத்துடன் மேற்கொள்ளப்படுவதால், இந்த ஊடுருவல் கண்டிப்பாக வெளிநாட்டிலிருந்தே நடந்துள்ளது என்றாா்.

இஸ்ரேலைச் சோ்ந்த நிறுவனத்தின் தயாரிப்பான பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் உலகம் முழுவதும் அரசியல் தலைவா்கள், தொழிலதிபா்கள், ஊடகவியலாளா்கள் உள்ளிட்டோரின் கைப்பேசிகள் ஊடுருவப்பட்டதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com