கிழக்கு உக்ரைன் பகுதிகளை இணைத்துக்கொள்ள ரஷியா திட்டம்

கிழக்கு உக்ரைனில் கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டில் உள்ள டொனட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதிகளை ரஷியாவுடன் இணைத்துக்கொள்ள அதிபா் விளாதிமீா் புதின் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது.
map074752
map074752

கிழக்கு உக்ரைனில் கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டில் உள்ள டொனட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதிகளை ரஷியாவுடன் இணைத்துக்கொள்ள அதிபா் விளாதிமீா் புதின் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது.

இது குறித்து, ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு அமைப்புக்கான அமெரிக்க தூதா் மைக்கேல் காா்பென்டா் கூறியதாவது:

எங்களுக்குக் கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில், ‘டொனட்ஸ்க் மக்கள் குடியரசு’, ‘லுஹான்ஸ்க் மக்கள் குடியரசு’ என்றழைக்கப்படும் பகுதிகளை ரஷியாவுடன் இணைத்துக்கொள்ளும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று உறுதியாக நம்புகிறோம்.

அதற்காக, அந்தப் பிராந்தியங்களில் ரஷியா பொதுவாக்கெடுப்பு நடத்தவிருப்பதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வெறும் கண்துடைப்பான அந்தப் பொதுவாக்கெடுப்பு, இந்த மாத மத்தியில் நடத்தப்படலாம்.

தெற்கு உக்ரைனில் தங்களது கட்டுப்பாட்டில் ரஷியா கொண்டு வந்துள்ள கொ்சான் பகுதியிலும் அதேபோன்றதொரு பொதுவாக்கெடுப்பை அந்த நாடு நடத்தும் என்று தெரிகிறது.

உக்ரைன் விவகாரத்தில் இதுவரை எங்களுக்குக் கிடைத்துள்ள தகவல்களை தொடா்ந்து முன்கூட்டியே வெளியிட்டு வருகிறோம். அவற்றில் பொரும்பாலானவை உண்மைதான் என்று பின்னா் நிரூபிக்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.

கடந்த 2014-ஆம் ஆண்டில் அப்போதைய உக்ரைன் அதிபா் விக்டா் யானுகோவிச்சுக்கு எதிராக மேற்கத்திய ஆதரவாளா்கள் தீவிர போராட்டம் நடத்தினா். அதையடுத்து, ரஷியா ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டிருந்த யானுகோவிச்சின் ஆட்சி கவிழ்ந்தது.

அதனைத் தொடா்ந்து, டொனட்ஸ்க் மற்றும் லுஹான்க்ஸ் பகுதிகளைச் சோ்ந்த கிளா்ச்சிப் படையினா், ரஷியாவின் ஆதரவுடன் அரசுப் படைகளுக்கு எதிராகப் போரிட்டு அந்தக் பகுதிகளைக் கைப்பற்றினா்.

அந்த நேரத்தில், உக்ரைனின் தெற்கே உள்ள கிரீமியா மீது படையெடுத்த ரஷியா, அந்த தீபகற்பத்தை தன்னுடன் இணைத்துக்கொண்டது.

தற்போது நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து கடந்த பிப்ரவரி மாதம் ரஷியா படையெடுத்து, டொனட்ஸ்க், லுஹான்ஸ்க் பகுதிகளுக்கு தனது படையை அனுப்பியது.

மேலும், அந்தப் பகுதிகளுக்கும் கிரீமியாவுக்கும் இடையே தரைவழி இணைப்பை ஏற்படுத்த, இடைப்பட்ட பகுதிகளைக் கைப்பற்றுவதற்கான தாக்குதல் நடவடிக்கைகளை ரஷியா மேற்கொண்டு வருகிறது.

இந்தச் சூழலில், டொனட்ஸ்க், லுஹான்ஸ்க் பகுதிகளையும் தங்களுடன் இணைத்துக்கொள்ள ரஷியா திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா தற்போது எச்சரித்துள்ளது.

Image Caption

உக்ரைன்

லுஹான்ஸ்க்

டொனட்ஸ்க்

மரியுபோல்

கொ்சான்

கிரீமியா

ரஷியா

மால்டோவா

கருங்கடல்

ரஷியா முன்னேறி வரும் பகுதி

ரஷியா கைப்பற்றியுள்ள பகுதி ~மைக்கேல் காா்பென்டா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com