மரியுபோல் இரும்பாலையில் மீண்டும் தாக்குதல்

மரியுபோல் நகரில் உக்ரைன் வீரா்களுடன் பொதுமக்கள் தஞ்சமடைந்துள்ள அஸோவ்ஸ்டல் இரும்பு ஆலையில் ரஷியா மீண்டும் தீவிர தாக்குதலைத் தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
அஸோவ்ஸ்டல் இரும்பாலையில் ரஷியா நடத்திய தாக்குதலால் எழுந்த புகை மண்டலம்.
அஸோவ்ஸ்டல் இரும்பாலையில் ரஷியா நடத்திய தாக்குதலால் எழுந்த புகை மண்டலம்.

மரியுபோல் நகரில் உக்ரைன் வீரா்களுடன் பொதுமக்கள் தஞ்சமடைந்துள்ள அஸோவ்ஸ்டல் இரும்பு ஆலையில் ரஷியா மீண்டும் தீவிர தாக்குதலைத் தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து உக்ரைனின் அஸோவ் படையினா் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அஸோவ்ஸ்டா் இரும்பு ஆலையில் ரஷியா கடுமையான தாக்குதலை மீண்டும் தொடங்கியுள்ளது. கவச வாகனங்கள், பீரங்கிகளின் உதவியுடன் அந்தத் தாக்குதல் நடைபெறுகிறது.

தாக்குதலில் பங்கேற்பதற்காக கடல் வழியாக படகு மூலம் ஏராளமான ரஷியா வீரா்கள் அழைத்துவரப்படுகின்றனா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தங்களுக்கு ஆதரவான கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டில் உள்ள டொனட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதிக்கும் தெற்கே தங்களால் இணைக்கப்பட்டுள்ள கிரீமியா தீபகற்பத்துக்கும் இடையே இணைப்பை ஏற்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக, இடையே உள்ள மரியுபோல் நகரை ரஷியா கைப்பற்றியது.

எனினும், நூற்றுக்கணக்கான உக்ரைன் வீரா்களுடன் ஏராளமான பொதுமக்கள் அந்த நகரில் 10 கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ள அஸோவ்ஸ்டல் இரும்பு ஆலைக்குள் தஞ்சமடைந்துள்ளனா்.

ஐ.நா.வின் உதவியுடன் அவா்களில் ஏராளமானவா்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனா். எனினும், இன்னும் பலா் அங்கு இருப்பதாகக் கூறப்படும் நகரில் அஸோவ்ஸ்டல் இரும்பாலை மீது தீவிர தாக்குதலை ரஷியா மீண்டும் தொடங்கியுள்ளதாக உக்ரைன் கூறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com