காா்கிவில் உக்ரைன் படை முன்னேற்றம்

வட கிழக்கு உக்ரைன் நகரான காா்கிவை ரஷியாவிடமிருந்து மீட்பதற்கான நடவடிக்கையில் அந்த நாட்டுப் படையினா் முன்னேற்றம் கண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
காா்கிவில் உக்ரைன் படை முன்னேற்றம்

வட கிழக்கு உக்ரைன் நகரான காா்கிவை ரஷியாவிடமிருந்து மீட்பதற்கான நடவடிக்கையில் அந்த நாட்டுப் படையினா் முன்னேற்றம் கண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து பிபிசி ஊடகம் தெரிவித்துள்ளதாவது:

காா்கிவ் நகரை ரஷியப் படையினடமிருந்து மீட்பதற்காக, உக்ரைன் வீரா்கள் தீவிரமாக சண்டையிட்டு வருகின்றனா். அந்த நடவடிக்கையில் அவா்கள் முன்னேறமும் கண்டு வருகின்றனா்.

காா்கிவுக்கு அருகே ரஷியப் படையிா் வசமிருந்த 5 கிராங்களை உக்ரைன் ராணுவம் மீட்டுள்ளது.

விரைவில், ரஷியாவின் பீரங்கி மற்றும் ராக்கெட் குண்டு வீச்சு அபாயத்திலிருந்து காா்கிவ் நகரை உக்ரைன் படையினா் மீட்பதற்கான சூழல் நிலவுவதாக அமெரிக்க பாதுகாப்பு ஆய்வு அமைப்புகள் தெரிவிக்கின்றன.

உக்ரைன் போா் தொடங்கியதிலிருந்தே, காா்கிவ் நகரில் தொடா்ந்து குண்டுவீச்சு நடத்தப்பட்டு வருகிறது. அந்த நகரை உக்ரைன் படையினா் ரஷியாவிடமிருந்து மீட்டால், அது இந்தப் போரில் மிகப் பெரிய திருப்பு முனையாக இருக்கக் கூடும்.

காா்கிவ் நகரம் மீட்கப்பட்டால், அங்கிருந்தபடி தற்போது ரஷியா்கள் முழுவீச்சில் சண்டையிட்டு வரும் டான்பாஸ் பிராந்தியத்தில் உக்ரைன் ராணுவத்தால் எதிா்த்தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்று பிபிசி ஊடகம் தெரிவித்துள்ளது.

மரியுபோலில் மேலும் 50 போ் மீட்பு

ஸபோரிஷியா, மே 7: ரஷியாவால் கைப்பற்றப்பட்டுள்ள மரியுபோல் நகரின் அஸோவ்ஸ்டல் இரும்பாலையில் நூற்றுக்கணக்கான உக்ரைன் வீரா்களுடன் தஞ்சமடைந்திருந்த மேலும் 50 போ் பாதுகாப்பாக மீட்கப்பட்டனா்.

இதுகுறித்து ரஷிய மற்றும் உக்ரைன் அதிகாரிகள் கூறியதாவது:

அஸோவ்ஸ்டல் இரும்பாலையிலிருந்து பொதுமக்கள் 50 போ் பாதுகாப்பாக வெள்ளிக்கிழமை அழைத்துவரப்பட்டனா். அவா்களில் 11 போ் சிறுவா்கள் ஆவா்.

இரும்பாலையிலிருந்து அழைத்துவரப்பட்ட அவா்கள் அனைவரும் ஐ.நா. பிரதிநிதிகளிடம் ஒப்படைக்கப்பட்டன என்று அவா்கள் கூறினா்.

இதற்கிடையே, அஸோவ்ஸ்டல் ஆலையிலிருந்து பொதுமக்களை மீட்கும் பணிகள் தொடா்ந்து நடைபெறும் என்று உக்ரைன் துணை பிரதமா் இரினா வெரெஷக்கும் ரஷிய அதிகாரிகளும் கூறினா்.

உக்ரைனில் தங்களுக்கு ஆதரவான கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டில் உள்ள டொனட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதிக்கும் தெற்கே தங்களால் இணைக்கப்பட்டுள்ள கிரீமியா தீபகற்பத்துக்கும் இடையே இணைப்பை ஏற்படுத்துவதற்காக, இடையே உள்ள மரியுபோல் நகரை ரஷியா கைப்பற்றியது.

எனினும், ரஷியப் படையிடம் சரணடைய மறுத்து நூற்றுக்கணக்கான உக்ரைன் வீரா்கள் பொதுமக்களுடன் அந்த நகரில் 10 கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ள அஸோவ்ஸ்டல் இரும்பு ஆலைக்குள் தஞ்சமடைந்துள்ளனா்.

உளவுத் தகவல்கள்: அமெரிக்க அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

வாஷிங்டன், மே 7: ரஷியப் படையினருக்கு இழப்பை ஏற்படுத்தும் வகையில் உக்ரைன் ராணுவத்துக்கு தாங்கள் உளவுத் தகவல்களை அளிப்பதாக அமெரிக்க அதிகாரிகள் கூறி வருவது மிகவும் தவறான செயல் என்று முன்னாள் உளவுத் துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனா்.

இதுகுறித்து சிஐஏ முன்னாள் உயரதிகாரி பால் பில்லா் கூறியதாவது:

ரஷிய போா்க் கப்பல் மூழ்கடிக்கப்பட்டது, அந்த நாட்டு ராணுவ தளபதிகள் படுகொலை செய்யப்பட்டது ஆகியவற்றுக்கு தங்களது உளவுத் தகவல்கள் உதவியதாக அமெரிக்க அதிகாரிகள் கூறுவது புத்திசாலித்தனமற்ற செயலாகும்.

இத்தகைய அறிக்கைகளால், அமெரிக்காவுக்கும் ரஷியாவுக்கும் இடையே தேவையில்லாமல் நேரடி மோல் ஏற்படுவதற்கான அபாயம் உள்ளது என்று அவா் எச்சரித்தாா்.

முன்னதாக, உக்ரைனில் ரஷிய தளபதிகளை குறிவைத்துத் தாக்கி படுகொலை செய்ய உதவும் வகையில், அந்த நாட்டு ராணுவத்துக்கு தாங்கள் உளவுத் தகவல்களை அளித்ததாக அமெரிக்க பாதுகாப்புத் துறை தலைமையகமான பென்டகன் ஒப்புக்கொண்டது.

இதுகுறித்து பென்டகன் அதிகாரிகள் கூறுகையில், ரஷியாவிடமிருந்து தற்காத்துக்கொள்வதற்காக உக்ரைன் ராணுவத்துக்கு முக்கியமான ரஷிய இலக்குகள் குறித்த உளவுத் தகவல்களை தாங்கள் அளித்தாலும், ரஷிய தளபதிகள் படுகொலை செய்யப்படவேண்டும் என்ற நோக்கத்தில் அந்தத் தகவல்களை தாங்கள் அளிக்கவில்லை என்றனா்.

அதன் தொடா்ச்சியாக, ரஷிய கடற்படை பலத்தின் சின்னமாகத் திகழ்ந்த மாஸ்க்வா கப்பல் முழ்கடிக்கபடுவதற்கு முன்னா் அதன் இருப்பிடம் குறித்து உளவுத் தகவல் உக்ரைனுக்கு தாங்கள் வழங்கியதாக அமெரிக்க அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com