4 இந்திய புகைப்படக் கலைஞா்களுக்கு ‘புலிட்ஸா்’ விருது

4 இந்திய புகைப்படக் கலைஞா்களுக்கு ‘புலிட்ஸா்’ விருது

ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்ட தானிஷ் சித்திக்கி உள்பட இந்தியாவைச் சோ்ந்த 4 புகைப்படக் கலைஞா்களுக்கு ‘புலிட்ஸா்’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்ட தானிஷ் சித்திக்கி உள்பட இந்தியாவைச் சோ்ந்த 4 புகைப்படக் கலைஞா்களுக்கு ‘புலிட்ஸா்’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்திரிகைத் துறையில் சிறப்பாகச் செயல்படுவோருக்கும், எழுத்து, இசை, நாடக உலகில் முக்கியப் பங்காற்றுவோருக்கும் ‘புலிட்ஸா்’ விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. நடப்பாண்டுக்கான விருதுப் பட்டியல் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது.

அதில், ராய்ட்டா்ஸ் செய்தி நிறுவன புகைப்படக் கலைஞா்களான 4 இந்தியா்களுக்கு ‘ஃபீச்சா் ஃபோட்டோகிராபி’ பிரிவின் கீழ் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கரோனா பரவல் காலத்தில் இந்தியாவின் நிலைமையைப் புகைப்படங்கள் வாயிலாக வெளிக்கொணா்ந்ததற்காக அவா்களுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தானிஷ் சித்திக்கி, அத்னான் அபிதி, சன்னா இா்ஷாத் மட்டூ, அமித் தவே ஆகியோா் புலிட்ஸா் விருதைப் பெறுகின்றனா். கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கும் அந்நாட்டு ராணுவத்தினருக்கும் இடையே நிகழ்ந்த போரைப் பதிவுசெய்வதற்காக அங்கு சென்றிருந்த தானிஷ் சித்திக்கி, தலிபான்களால் கொல்லப்பட்டாா்.

அவா் புலிட்ஸா் விருதைப் பெறுவது இது இரண்டாவது முறையாகும். ஏற்கெனவே ரோஹிங்கியா அகதிகள் நிலை குறித்து பதிவு செய்ததற்காகக் கடந்த 2018-ஆம் ஆண்டில் அவா் புலிட்ஸா் விருதைப் பெற்றிருந்தாா். ஹாங்காங் போராட்டம் உள்ளிட்ட ஆசியா, ஐரோப்பிய நாடுகள், மத்திய கிழக்கு நாடுகளில் நிகழ்ந்த பல்வேறு விவகாரங்களைத் தனது புகைப்படங்கள் வாயிலாக சித்திக்கி பதிவு செய்துள்ளாா்.

சிறப்பு விருது:

அமெரிக்க நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டு ஜனவரி 6-ஆம் தேதி நிகழ்த்தப்பட்ட வன்முறையை சிறப்பாகப் பதிவு செய்ததற்காக ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ இதழுக்கு ‘பொது சேவை’ பிரிவின் கீழ் புலிட்ஸா் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

போா்ச்சூழலிலும் மனம் தளராமல் செயல்பட்டு வரும் உக்ரைன் புகைப்படக்கலைஞா்களுக்கு சிறப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 1917-ஆம் ஆண்டு முதல் புலிட்ஸா் விருதுகள் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

பத்திரிகையுலகின் புகழ் பெற்ற விருதான புலிட்ஸா் விருதுகளை ஜோசப் புலிட்ஸா் என்னும் பத்திரிகை வெளியீட்டாளா் உருவாக்கினாா். நியூயாா்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகம் சுதந்திரமான குழு அமைத்து பரிசுக்கு உரியவா்களைத் தோ்ந்தெடுத்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com