டிவிட்டரில் டிரம்ப் மீதான தடை நீக்கப்படும்: எலான் மஸ்க்

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீதான டிவிட்டர் தடையை நீக்குவதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீதான டிவிட்டர் தடையை நீக்குவதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

டிவிட்டர் நிறுவனத்தை ரூ.3.30 லட்சம் கோடிக்கு வாங்கிய எலான் மஸ்க் சில திருத்தங்களை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக, டிவிட்டரில் எடிட் செய்யும் வசதியை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ள நிலையில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனாலட் டிரம்பின் மீதான டிவிட்டர் தடை அகற்றவதாகவும் அவரை டிவிட்டரில் தடை செய்தது முட்டாள்தனமான முடிவு என்றும் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

2020 ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க தோ்தலில் முறைகேடு நடைபெற்றதாக டிரம்ப் குற்றம் சாட்டியதால் அவா் நாடாளுமன்றக் கலவரத்தை தூண்டியதாகக் கூறி, டிவிட்டா் நிறுவனம் அவரது கணக்கை நிரந்தரமாக முடக்கியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com