மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ்-க்கு கரோனா

மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் தனக்கு லேசான அறிகுறிகளுடன் கூடிய கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை வீட்டில் தனிப்படுத்திக் கொண்டுள்ளதாக கூறியுள்ளார்.
பில் கேட்ஸ்
பில் கேட்ஸ்

மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் தனக்கு லேசான அறிகுறிகளுடன் கூடிய கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை வீட்டில் தனிப்படுத்திக் கொண்டுள்ளதாக கூறியுள்ளார்.

உலக பணக்காரர்களில் ஒருவரும், மைக்ரோசாப்ட் இணை நிறுவனருமான பில்கேட்ஸ் கரோனா நொய்த்தொற்றைத் தடுக்கும் நடவடிக்கைகளுக்கு, குறிப்பாக தடுப்பூசிகள் மற்றும் ஏழை நாடுகளுக்கான கரோனா தடுப்பு மருத்துகள் வழங்கும் அணுகலுக்கான ஆதரவாளராக இருந்து வருகிறார். 

இந்நிலையில், அவருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இது குறித்து அவர் தனது சுட்டுரை பக்கத்தில், தனக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறிகளை அனுபவித்து வருகிறேன். நான் மீண்டும் முழுமையான ஆரோக்கியமாகும் வரை வீட்டிலேயே தனிமைப் படுத்திக் கொண்டு மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையைப் பின்பற்றி வருகிறேன்.  

மேலும் கரோனா தடுப்பூசி மற்றும் பூஸ்ட்ர் தடுப்பூசி பெற்ற அதிர்ஷ்டசாலி என்பதால் லேசான தொற்று பாதிப்பே உள்ளது. சோதனை மற்றும் சிறந்த மருத்துவ பராமரிப்பை பெற்றுள்ளேன். தற்போது நலமாக உள்ளேன்.

மேலும் கேட்ஸ் அறக்கட்டளை இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக இன்று ஒருங்கிணைகிறது. அனைவரையும் பார்க்க குழுவில் இருப்பதில் தான் அதிர்ஷ்டசாலி மற்றும் அவர்களின் கடின உழைப்புக்கு நன்றி. இதனைத் தொடர்ந்து நாங்கள் கூட்டாளர்களுடன் தொடர்ந்து பண்பணியாற்றுவோம்.

மேலும் எங்களில் யாரும் மீண்டும் ஒரு நோய்த்தொற்றை எதிர்கொள்ள வேண்டியதில்லை என்பதை உறுதிப்படுத்த எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம் என கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com