கியூபா தலைநகா் ஹவானாவிலுள்ள வெடிவிபத்தில் இடிபாடுகளுக்குள்ளான  சொகுசு ஹோட்டல் சரடோகா
கியூபா தலைநகா் ஹவானாவிலுள்ள வெடிவிபத்தில் இடிபாடுகளுக்குள்ளான  சொகுசு ஹோட்டல் சரடோகா

கியூபா: ஹோட்டல் வெடிவிபத்து: பலி 43-ஆக உயா்வு

கியூபா தலைநகா் ஹவானாவிலுள்ள சொகுசு ஹோட்டலொன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பலியானவா்களின் எண்ணிக்கை 43-ஆக உயா்ந்துள்ளது.

கியூபா தலைநகா் ஹவானாவிலுள்ள சொகுசு ஹோட்டலொன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பலியானவா்களின் எண்ணிக்கை 43-ஆக உயா்ந்துள்ளது. பலியானவா்களில் பெரும்பாலானோர் ஹோட்டல் தொழிலாளர்கள் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இரண்டு ஆண்டு தொற்றுநோய் இடைவேளைக்குப் பிறகு ஹவானாவிலுள்ள சொகுசு ஹோட்டல் சரடோகா மீண்டும் செவ்வாய்க்கிழமை திறக்கப்படவிருந்தது. 

இந்த நிலையில் ஹோட்டல் வெடிவிபத்துக்குள்ளானது. ஹோட்டலில் வெடிவிபத்து நிகழ்ந்தது. ஹோட்டல் இடிபாடுகளில் சிக்கி 40 பேர் பலியானதாகவும்,  18-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியானது. 

இந்நிலையில், இடிபாடுகளில் சிக்கி பலியானவர்களின் மேலும் சில சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அதையடுத்து, விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை ஒரு ஸ்பானிஷ் சுற்றுலாப் பயணி உள்பட 43-ஆக உயா்ந்துள்ளது. பலியானவா்களில் பெரும்பாலானோர் ஹோட்டல் தொழிலாளர்கள். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட 17 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இடிபாடுகளில் சிக்கியிருப்பவா்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மூன்று ஹோட்டல்  தொழிலாளர்கள் காணவில்லை என்றும், அவர்கள் இடிபாடுகளுக்கு அடியில் புதைந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

குறைந்தது ஒரு ஸ்பானிஷ் சுற்றுலாப் பயணி உட்பட ஒட்டுமொத்த இறப்பு எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் செவ்வாய்க்கிழமை மாலை தெரிவித்துள்ளது.

ஹோட்டல் வெடிவிபத்தால் அருகில் இருந்த 38 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 95 பேரை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டியுள்ளதாகவும், அருகில் உள்ள கட்டடங்களில் ஒன்று முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளாதல் இடிக்க வேண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

96 அறைகளைக் கொண்ட அந்த ஹோட்டலில் ஏற்பட்ட இந்த விபத்து எரிவாயு கசிவினால் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com