உக்ரைனில் 50 லட்சம் பேர் வேலையிழப்பு: பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு அறிக்கை

உக்ரைனில் 50 லட்சம் பேர் வேலையிழப்பு: பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு அறிக்கை

ரஷியாவின் தாக்குதல் தொடங்கியதில் இருந்து உக்ரைனில் 50 லட்சம் பேர் வேலையிழந்துள்ளதாக பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு (ஐஎல்ஓ) தெரிவித்துள்ளது.

ரஷியாவின் தாக்குதல் தொடங்கியதில் இருந்து உக்ரைனில் 50 லட்சம் பேர் வேலையிழந்துள்ளதாக பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு (ஐஎல்ஓ) தெரிவித்துள்ளது.

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷியா, கடந்த பிப்ரவரி மாத இறுதியில் உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்தது. தலைநகர் கீவ், கார்கீவ் பகுதிகளில் தொடங்கி பெரும்பாலாக அனைத்து இடங்களிலும் தாக்குதல் நடத்தி விட்டது. 

அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைனும் ரஷியாவுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. ரஷியத் தரப்பிலும் வீரர்கள் அதிகமாக உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில், ரஷிய படையெடுப்பிற்குப் பிறகு உக்ரைனில் 50 லட்சம் பேர் வேலையிழந்துள்ளதாக பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு (ஐஎல்ஓ) தகவல் வெளியிட்டுள்ளது. 

மேலும், போரை நிறுத்தினால் இதில் 34 லட்சம் பேர் வேலைக்குத் திரும்பவும் வேலையின்மை 8.9 சதவீதமாகக் குறையவும் வாய்ப்புள்ளதாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ரஷியப் போரினால் உக்ரைன் பொருளாதாரம் பெருமளவில் சரிந்துள்ளது. உக்ரைனில் இருந்து 50 லட்சத்துக்கும் அதிகமானோர் அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களும் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com