இலங்கை வன்முறை: இதுவரை 9 பேர் பலி; 219 பேர் காயம்

இலங்கை வன்முறையில் பலியானோர் எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது. மேலும், 219 பேர் காயமடைந்ததாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இலங்கை வன்முறை: இதுவரை 9 பேர் பலி; 219 பேர் காயம்

இலங்கை வன்முறையில் பலியானோர் எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது. மேலும், 219 பேர் காயமடைந்ததாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் திடீா் திருப்பமாக, பிரதமா் மகிந்த ராஜபட்ச தனது பதவியை திங்கள்கிழமை ராஜிநாமா செய்தாா்.

இதற்கிடையே, தலைநகா் கொழும்பில் பிரதமரின் இல்லம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவா்கள் மீது மகிந்த ராஜபட்சவின் ஆதரவாளா்கள் திடீா் தாக்குதலில் ஈடுபட்டனா். 

இதனைத் தொடர்ந்து, அமைதியாக நடைபெற்று வந்த போராட்டம் வன்முறையாக மாறியது. ஆத்திரமடைந்த மக்கள், பிரதமரின் இல்லத்திற்கு தீ வைத்தனர். போராட்டக்காரர்கள் மீது ஆளுங்கட்சியினரும், ஆளுங்கட்சியினர் மீது போராட்டக்காரர்களும் மாறிமாறித் தாக்குதல் நடத்தி வருவதால் இலங்கையில் அசாதாரண சூழல் நிலவி வருகின்றது.

வன்முறையை கட்டுக்குள் கொண்டு வர, பொது சொத்துக்களை சேதப்படுத்துவோர் மீது துப்பாக்கிச் சூடு நடத்த ஆயுதப்படைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த வன்முறையில் இதுவரை 9 பேர் பலியாகியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், 219 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். போராட்டக்காரர்களால் 136 சொத்துக்கள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com