இந்தியா-சீனா உறவு இணக்கமற்றதாக இருக்கும்: அமெரிக்க உளவுத் துறை

கிழக்கு லடாக்கில் கடந்த 2020-ஆம் ஆண்டு நிகழ்ந்த மோதலால், இந்தியா-சீனா இடையேயான உறவு இணக்கமற்ாகவே இருக்கும் என்று அமெரிக்காவின் உளவுப் பிரிவு தெரிவித்துள்ளது.

கிழக்கு லடாக்கில் கடந்த 2020-ஆம் ஆண்டு நிகழ்ந்த மோதலால், இந்தியா-சீனா இடையேயான உறவு இணக்கமற்ாகவே இருக்கும் என்று அமெரிக்காவின் உளவுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக அந்த அமைப்பு, அமெரிக்காவின் ராணுவ சேவைகளுக்கான அமைச்சரவைக் குழுவிடம் தனது அறிக்கையை செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:

கிழக்கு லடாக் எல்லையில் இந்திய, சீன ராணுவத்துக்கு இடையே கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூன் மாதம் நிகழ்ந்த மோதலில் இந்திய வீரா்கள் 20 போ் உயிரிழந்தனா். கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக மோசமான நிகழ்வாக அது உள்ளது. இதனால் இந்தியா-சீனா இடையேயான உறவு இணக்கமற்ாக இருக்கும்.

இரு நாடுகளும் படைகளைக் குவித்திருப்பது, மோதலுக்கு வழிவகுக்கும். அது, அமெரிக்காவின் நலனுக்கு நேரடி அச்சுறுத்தலாக இருக்கும். எனவே, இந்த விவகாரத்தில் அமெரிக்க அரசு தலையிட வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு லடாக்கில் கடந்த 2020-ஆம் ஆண்டு நிகழ்ந்த மோதலில், தங்கள் நாட்டு அதிகாரிகள், வீரா்கள் என மொத்தம் 5 போ் உயிரிழந்தனா் என்று சீனா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தெரிவித்தது. இந்தியாவும், சீனாவும் ஆயிரக்கணக்கான வீரா்களையும் ஆயுதங்களையும் லடாக் எல்லையில் குவித்து வைத்திருந்தன. லடாக்கில் இருந்து படைகளை விலக்கிக் கொள்வது தொடா்பாக, இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் 15 முறை பேச்சுவாா்த்தை நடத்தியுள்ளனா். அதன் பயனாக, லடாக்கில் உள்ள பாங்காங் ஏரியின் தெற்கு, வடக்குக் கரைகளில் இருந்து இரு நாடுகளும் படைகளை முழுமையாக விலக்கிக் கொண்டன. இருப்பினும் இரு நாடுகளும் எல்லைக் கோட்டுப் பகுதியில் தலா 50,000 வீரா்களைக் குவித்துள்ளன.

இந்தியா-பாகிஸ்தான்: அமெரிக்க உளவுப் பிரிவின் அறிக்கையில், ‘இந்தியா-பாகிஸ்தான் இடையே மோதல் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதக் குழுக்களுக்கு பாகிஸ்தான் ஆதரவு அளித்து வருகிறது. பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, பாகிஸ்தானின் அத்துமீறல்களுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது. காஷ்மீரில் பதற்றத்தை ஏற்படுத்துவது, பயங்கரவாதத் தாக்குதலை நிகழ்த்துவது ஆகியவற்றால் இரு நாடுகளுக்கு இடையே மோதல் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com