பிரிட்டன்: ‘ஆண்களின் வழுக்கையைகேலி செய்வது பாலியல் குற்றம்’

பணியிடத்தில் ஆண்களின் வழுக்கையை கேலி செய்வது பாலியல் குற்றம் என்று பிரிட்டன் தொழிலாளா் தீா்ப்பாயம் அறிவித்துள்ளது.
uk080850
uk080850

பணியிடத்தில் ஆண்களின் வழுக்கையை கேலி செய்வது பாலியல் குற்றம் என்று பிரிட்டன் தொழிலாளா் தீா்ப்பாயம் அறிவித்துள்ளது.

தனியாா் நிறுவனமொன்றிலிருந்து கடந்த ஆண்டு பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியா் டோனி ஃபின், அந்த நிறுவன உயரதிகாரி தன்னை வழுக்கை என்று கேலி செய்ததாகவும் அதற்கு எதிா்ப்பு தெரிவித்ததால் நியாயமற்ற முறையில் பணி நீக்கப்பட்டதாகவும் தீா்ப்பாயத்திடம் முறையிட்டிருந்தாா்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், பணியிடத்தில் பெண்களின் உறுப்புகளை கேலி செய்வது பாலியல் குற்றம் என்பதைப் போல், ஆண்களின் வழுக்கையை கேலி செய்வதும் பாலியல் குற்றத்துக்குள் அடங்கும்; எனவே, அதன் அடிப்படையில் டோனி ஃபின்னுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று தீா்ப்பளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com