ரஷ்யாவிடமிருந்து ஃபின்லாந்துக்கு அச்சுறுத்தல் இல்லை: நேட்டோ தூதர்

ரஷ்யாவிடமிருந்து ஃபின்லாந்துக்கு எந்த ஒரு நேரடி அச்சுறுத்தலும் இல்லை என நேட்டோ அமைப்புக்கான ஃபின்லாந்து தூதர் கிளவுஸ் கோர்கோனன் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவிடமிருந்து ஃபின்லாந்துக்கு அச்சுறுத்தல் இல்லை: நேட்டோ தூதர்

ரஷ்யாவிடமிருந்து ஃபின்லாந்துக்கு எந்த ஒரு நேரடி அச்சுறுத்தலும் இல்லை என நேட்டோ அமைப்புக்கான ஃபின்லாந்து தூதர் கிளவுஸ் கோர்கோனன் தெரிவித்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமை ஃபின்லாந்து நாட்டின் அதிபர் சவுலி நினிஸ்டோ மற்றும் அந்த நாட்டின் பிரதமர் சன்னா மரின் இருவரும் ஃபின்லாந்து எந்த ஒரு கால தாமதமுமின்றி நேட்டோ அமைப்பில் சேர உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும் எனக் கூறினர். இதனைத் தொடர்ந்து ஃபின்லாந்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் பெக்கா ஹாவிஸ்டோ நாடாளுமன்ற முடிவுக்குப் பின்னர் அடுத்த வாரத்தின் இடையில் ஃபின்லாந்து நேட்டோவில் இணைவது குறித்து அறிவிப்பு வெளியாகலாம் என தெரிவித்தார்.

நேட்டோவில் இணைவது குறித்து கிளவுஸ் கோர்கோனன் கூறியதாவது, “  ஃபின்லாந்துக்கு ரஷ்யாவினால் இதுவரை எந்த ஒரு அச்சுறுத்தலும் இல்லை. இருப்பினும், நாங்கள் எங்களது பாதுகாப்பில் மிகுந்த எச்சரிக்கையாக உள்ளோம். உக்ரைனில் ரஷ்யாவின் தாக்குதலுக்குப் பிறகு தலைநகர் ஹெல்சின்கியில் நாங்கள் பாதுகாப்பினை அதிகப்படுத்தியுள்ளோம்” என்றார்.

உக்ரைனில் நிலவும் ராணுவத் தாக்குதல் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக நேட்டோ அமைப்பில் சேராமல் நடுநிலை வகித்து வரும் ஸ்வீடன் மற்றும் ஃபின்லாந்து நாட்டினை கலக்கமடையச் செய்துள்ளது. கடந்த மார்ச மாதம் நேட்டோ அமைப்பின் பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க், ஸ்வீடன் மற்றும் ஃபின்லாந்து நேட்டோ அமைப்பில் சேர விரும்பினால் அதற்கான விண்ணப்பங்கள் விரைந்து செயல்படுத்தப்படும் என தெரிவித்திருந்தார். 

கடந்த வியாழக்கிழமை ஸ்வீடன் மற்றும் ஃபின்லாந்து ஆகிய இரு நாடுகளுமே நேட்டோ அமைப்பில் சேர விரும்புவதாக அதிகாரபூர்வமாக உறுதிபடுத்தியுள்ளன.  அதே போல இந்த இரு ஐரோப்பிய நாடுகளின் முடிவுக்கு அமெரிக்கா மற்றும் ஜெர்மனி ஆகிய இரு நாடுகளும் ஆதரவு அளிப்பதாக உறுதியளித்துள்ளன.

ஃபின்லாந்தின் இந்த முடிவுக்கு ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகம், ஃபின்லாந்து திடீரென தனது வெளியுறவுக் கொள்கையில் இப்படி ஒரு பெரிய முடிவை எடுக்குமானால் அதனை ராணுவ மற்றும் தொழில்நுட்ப ரீதியாக சந்திக்கும் முடிவிற்கு ரஷ்யா தள்ளப்படும் என தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com