வட கொரியா கரோனாவுக்கு மேலும் 21 போ் பலி

வட கொரியாவில் கரோனா பரவி வருவதாக அந்த நாடு முதல்முறையாக ஒப்புக்கொண்ட நிலையில், தற்போது மேலும் 21 பேர் உயிரிழந்துள்ளனர். 
கோப்புப்படம்
கோப்புப்படம்

வட கொரியாவில் கரோனா பரவி வருவதாக அந்த நாடு முதல்முறையாக ஒப்புக்கொண்ட மறுநாள், அந்த நோய் பாதிப்பு காரணமாக 6 போ் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையில், தற்போது மேலும் 21 பேர் உயிரிழந்துள்ளனர். 

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: 
நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் முதல் வேகமாகப் பரவி வரும் ‘காய்ச்சலுக்கு’ இதுவரை 5,24,440 பேர்  லட்சம் போ் சிசிக்சை பெற்றனா். அவா்களில் 2,80,810 போ் தனிமைப்படுத்தப்பட்டு, தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்; நேற்று ஒரே நாளில் 174,440 பேருக்கு தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், 21 பேர் தொற்றுக்கு பலியாகியுள்ளனா். இதையடுத்து தொற்றுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

மேலும் ஒமைக்ரான் நோய்த்தொற்று பாதித்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com