நேபாளத்தின் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் தொடக்கம்

நேபாளத்தில் புதிதாகக் கட்டப்பட்ட கௌதம புத்தர் சர்வதேச விமான நிலையம் இன்று தொடக்கிவைக்கப்பட்டது.
நேபாளத்தின் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் தொடக்கம்
நேபாளத்தின் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் தொடக்கம்


காத்மாண்டு: நேபாளத்தில் புதிதாகக் கட்டப்பட்ட கௌதம புத்தர் சர்வதேச விமான நிலையம் இன்று தொடக்கிவைக்கப்பட்டது. இது புத்தரின் பிறப்பிடமான லும்பினியிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

நேபாள தலைநகர் காத்மாண்டுவில் அமைந்துள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்துக்குப் பிறகு, அந்நாட்டின் இரண்டாவது சர்வதேச விமான நிலையமாக கௌதம புத்தர் சர்வதேச விமான நிலையம் தொடங்கப்பட்டுள்ளது. இது சுமார் 74 ஆண்டுகளுக்குப் பின் கட்டப்பட்டுள்ளது.

புத்த பூர்ணிமாவை முன்னிட்டு இன்று காலை இந்த விமானம் நிலையம் தொடங்கிவைக்கப்பட்டது. திங்கள்கிழமை காலை, ஜஸீரா ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானம் கௌதம புத்தர் சர்வதேச விமான நிலையத்திலிருந்து முதல் விமானமாக குவைத்துக்குப் புறப்பட்டுச் சென்றது.

எனினும், வழக்கமான நடைமுறைகள் முடிந்து விமான நிலையம் ஜூன் 12ஆம் தேதிதான் மக்கள் பயன்பாட்டுக்கு வரவிருக்கிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com