நேட்டோவில் இணைய கையெழுத்திட்ட ஸ்வீடன்

ஸ்வீடன் இன்று (செவ்வாய்க்கிழமை) 30 உறுப்பு நாடுகளைக் கொண்ட நேட்டோ அமைப்பில் இணைய விருப்பம் தெரிவித்து கையெழுத்திட்டது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

30 உறுப்பு நாடுகளைக் கொண்ட நேட்டோ அமைப்பில் இணைய விருப்பம் தெரிவித்து ஸ்வீடன் இன்று (செவ்வாய்க்கிழமை) கையெழுத்திட்டது.

நேற்று முன் தினம் நேட்டோ அமைப்பில் இணைய விரும்புவதாக ஸ்வீடன் விருப்பம் தெரிவித்திருந்தது. இந்த சூழலில் இன்று நேட்டாவில் இணைவதற்கான கோரிக்கையில் கையெழுத்திட்டுள்ளது. ஸ்வீடனைத் தொடர்ந்து ஃபின்லாந்தும் நேட்டோவில் இணைய விருப்பம் தெரிவித்து கையெழுத்திட உள்ளதாக தெரிகிறது. 

நேட்டோவில் இணைய எடுத்திருக்கும் இந்த இரு நாடுகளின் முடிவு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஸ்வீடன் தனது இந்த முடிவின் மூலம் கடந்த 200 ஆண்டுகளாக பின்பற்றி வந்த ராணுவ அணிசேராக் கொள்கையில் மாற்றம் வந்துள்ளது. அதேபோல இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஃபின்லாந்தும் அணிசேராகக் கொள்கையை பின்பற்றி வருகிறது. இந்த இரு நாடுகளின் இந்த முடிவும் கிரெம்லினின் (kremlin) புருவங்களை உயரச் செய்துள்ளது..

நேட்டோ அமைப்பில் உள்ள அனைத்து நாடுகளும் துரிதமாக இந்த இரு நாடுகளையும் இந்த கூட்டமைப்பில் இணைக்க ஆர்வம் காட்டும் நிலையில் துருக்கி அதற்கு தடையாக இருந்து வருகிறது. துருக்கியிலிருந்து தப்பி இந்த இரு நாடுகளில் இருக்கும் குற்றவாளிகளை மீண்டும் துருக்கியிடம் ஒப்படைக்க அந்த நாடுகள் மறுப்பதால் துருக்கி இவ்வாறு செயல்பட்டு வருகிறது. 

நேட்டோவில் புதிதாக ஒரு நாடு இணைய வேண்டுமென்றால் அந்த கூட்டமைப்பில் உள்ள அனைத்து நாடுகளும் அதற்கு சம்மதம் தெரிவிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com