ரஷிய அதிபர் புதின் கனடாவுக்குள் நுழையத் தடை

ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் மற்றும் அந்நாட்டு ராணுவத்தைச் சேர்ந்த அதிகாரிகள் உக்ரைன் வழியாக நுழைய கனடா தடை விதித்துள்ளது. 
ரஷிய அதிபர் விளாதிமீர் புதின்
ரஷிய அதிபர் விளாதிமீர் புதின்


கனடா: ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் மற்றும் அந்நாட்டு ராணுவத்தைச் சேர்ந்த அதிகாரிகள் உக்ரைன் வழியாக நுழைய கனடா தடை விதித்துள்ளது. 

இதுதொடர்பாக அந்நாட்டு பொது பாதுகாப்பு அமைச்சர் மார்கோ மென்டிசினோ கூறியதாவது: 

உக்ரைன் மீதான ரஷியப் படைகளின் தொடர் தாக்குதலுக்கு பிறகு ரஷியா மீது பொருளாதாரத் தடைகள் அதிகரித்து வரும் நிலையில், ரஷிய அதிபர் விளாதிமீர் புதின், அவரது அரசு மற்றும் ராணுவத்தைச் சேர்ந்த 1,000 பேர் நாட்டிற்குள் நுழைவதைத் தடை செய்யும் மசோதாவை செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 

மேலும், "புதின் ஆட்சியின் நெருங்கிய கூட்டாளிகள் மற்றும் முக்கிய ஆதரவாளர்கள் எங்கள் நாட்டிற்குள் நுழைவதைத் தடை செய்வது ரஷியாவை அதன் குற்றங்களுக்குப் பொறுப்பேற்கும் பல வழிகளில் ஒன்றாக இருக்கும்" என்று மார்கோ மென்டிசினோ தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com