குரங்கு அம்மை: அமெரிக்காவை அலறவிடும் புதிய நோய்

ஸ்பெயின், போர்ச்சுகல் ஆகிய நாடுகளில் 40க்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை இருப்பதாக சந்தேகிக்கப்பட்டு தற்போது சிலருக்கு இருப்பது உறுதியானது
கோப்புப்படம்
கோப்புப்படம்

மே மாதத்தின் தொடக்கத்திலிருந்தே, வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் 12க்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை இருப்பதாக சந்தேகிக்கப்பட்டு தற்போது அது சிலருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் மட்டுமே பரவியிருந்த நோய் தற்போது மற்ற கண்டங்களுக்கு பரவியுள்ளதா என அச்சம் எழுந்துள்ளது.

ஸ்பெயின், போர்ச்சுகல் ஆகிய நாடுகளில் 40க்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை இருப்பதாக சந்தேகிக்கப்பட்டு தற்போது சிலருக்கு இருப்பது உறுதியாகியுள்ளது. கனடாவில் 12க்கும் மேற்பட்டோர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சந்தேகிக்கப்படுகின்றனர்.

மே 6ஆம் தேதியிலிருந்து பிரிட்டனில் மட்டும் ஒன்பது பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், அமெரிக்காவில் முதல்முறையாக இந்த நோயால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார். கனடாவிலிருந்து மாசசூசெட்ஸ் திரும்பிய அந்த நபருக்கு குரங்கு அம்மை இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நோயால் பாதிக்கப்படுபவர்கள் பல வாரங்கள் கழித்தே இதிலிருந்து குணமடைகின்றனர். அரிதிலும் அரிதாகவே உயிரிழப்பு நிகழ்கிறது. கடந்த சில ஆண்டுகளில், இந்த நோயால் மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்கா நாடுகளில் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இந்த நோய் அரிதான ஒன்றாகவே கருதப்படுகிறது.

இதுகுறித்து பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் சுகாதாரத்துறை அலுவலர்களை ஒருங்கிணைத்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது. செவ்வாய்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தொற்றுநோயியல் நிபுணர் மருத்துவர். மரியா வான் கெர்கோவ் இதுகுறித்து விரிவாக பேசுகையில், "குரங்கு அம்மை எண்டெமிக்காக உள்ள நாடுகளில் இதன் தாக்கம் குறித்து புரிந்துகொள்வது அவசியம். 

இந்த நோய் எப்படி பரவுகிறது, அங்கு வாழும் மக்கள் மீது எந்த மாதிரியான அபாயங்கள் இதனால் ஏற்படுகிறது, மற்ற நாடுகளுக்கு பரவுவதால் எம்மாதிரியான ஆபாயத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து புரந்து கொள்ள வேண்டும்" என்றார்.

நைஜீரியாவிலிருந்து பிரிட்டனுக்கு சென்றவரால்தான் இந்த நோய் முதன்முதலில் பரவியுள்ளது. பின்னர், சமூக பரவல் காரணமாக மற்றவர்களுக்கு பரவியுள்ளதாக பிரிட்டன் சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

பிரிட்டன் சுகாதார பாதுகாப்பு அமைப்பின் தலைமை மருத்துவ ஆலோசகர் டாக்டர். சூசன் ஹாப்கின்ஸ் இதுகுறித்து கூறுகையில், "ஐரோப்பிய நாடுகள் முழுவதும் இந்த நோய் பரவியுள்ளது. சமீபத்தில், இதனால் பாதிக்கப்பட்டவர்களை இத்துடன் ஒப்பிட்டு பார்க்கும் போது நம்மிடையே குரங்கு அம்மை சமூக பரவலை ஏற்படுத்தியிருக்கிறதோ என்ற முதற் கட்ட கவலையை உறுதி செய்துள்ளது" என்றார்.

இதை பற்றி விரிவாக பேசிய உலக சுகாதார அமைப்பின் உதவி இயக்குநர் டாக்டர். சோஸ் ஃபால், "ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் ஆண்களிடையே இந்த நோய் பரவி இருப்பது தெரியவந்துள்ளது. இது பிரிட்டன் மற்றும் வேறு சில நாடுகளில் எப்படி பரவுகிறது என்பது குறித்து நன்கு புரிந்துகொள்ள நாம் முறையாக ஆராய வேண்டிய புதிய தகவல்" என்றார்.

உடலுறவு கொள்வதால் பரவும் நோய்களின் பட்டியலில் இது முன்னதாக சேர்க்கப்படவில்லை என்றும் எந்த ஒரு பாதுகாப்பும் இன்றி நேரடியாக உடலுறவு கொள்ளும்போது இந்த நோய் பரவலாம் என்றும் பிரிட்டன் சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.

இதன் அறிகுறிகள் குறித்து விவரித்துள்ள அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம், "அடிக்கடி காய்ச்சல் ஏற்படுவது, தசைவலி, வீக்கம் போன்ற காய்ச்சலுக்கான அறிகுறிகளுடன் இந்த நோய் பரவ தொடங்குகிறது. இதற்கு முன்பு முகம் மற்றும் உடலில் சின்னம்மை போன்ற தடிப்பு ஏற்படுகிறது"

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com