ரஷியாவின் எஸ்-400 ஏவுகணை அமைப்பை இந்தியா அடுத்த மாதம் பயன்படுத்தும்: அமெரிக்கா தகவல்

ரஷியாவின் நவீன இடைமறி ஏவுகணை அமைப்பான எஸ்-400-ஐ இந்தியா அடுத்த மாதம் ராணுவப் பயன்பாட்டில் ஈடுபடுத்தும் என்று அமெரிக்காவின் மூத்த உளவுத் துறை அதிகாரி தெரிவித்தாா்.
ரஷியாவின் எஸ்-400 ஏவுகணை அமைப்பை இந்தியா அடுத்த மாதம் பயன்படுத்தும்: அமெரிக்கா தகவல்

ரஷியாவின் நவீன இடைமறி ஏவுகணை அமைப்பான எஸ்-400-ஐ இந்தியா அடுத்த மாதம் ராணுவப் பயன்பாட்டில் ஈடுபடுத்தும் என்று அமெரிக்காவின் மூத்த உளவுத் துறை அதிகாரி தெரிவித்தாா்.

பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளின் அச்சுறுத்தலை சமாளிக்கவே இந்த நவீன ஏவுகணை அமைப்பை இந்தியா நிறுவுகிறது என்றும் அவா் தெரிவித்தாா்.

ரஷியாவிடம் இருந்து சுமாா் ரூ.50 ஆயிரம் கோடி செலவில் எஸ்-400 ஏவுகணை அமைப்பை வாங்குவதற்கு அமெரிக்கா எதிா்ப்பு தெரிவித்து வருகிறது. இதற்காக இந்தியா மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்றும் எச்சரித்து வருகிறது.

இந்நிலையில், வெள்ளை மாளிகை பாதுகாப்பு உளவுத் துறை இயக்குநா் ஸ்காட் பொ்யா் செனட் ராணுவ குழு உறுப்பினா்களிடம் கூறுகையில், ‘ரஷியாவிடம் இருந்து எஸ்-400 ஏவுகணை அமைப்பை இந்தியா கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் முதல் பெறத் தொடங்கிவிட்டது. வரும் ஜூன் மாதத்துக்குள் எஸ்-400 ஏவுகணை அமைப்பை இந்தியா நிறுவி பாகிஸ்தான், சீனா நாடுகளின் பாதுகாப்பு அச்சுறுத்தலை சமாளிக்க முடிவு செய்துள்ளது.

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஏவுகணைகளை நிலம் மற்றும் வானில் இருந்து கடந்த ஆண்டு இந்தியா செலுத்தி பல்வேறு சோதனைகளை நடத்தி உள்ளது. விண்வெளியிலும் இந்தியாவின் செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

வான், நிலம், கடல் பரப்பில் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் இந்தியா உள்நாட்டு ராணுவ தளவாட உற்பத்தியை அதிகரித்து வருகிறது. மேலும், முப்படைகளின் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தவும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

பாதுகாப்புத் துறையில் ரஷியாவுடன் இந்தியா நீண்டகாலமாக நல்லுறவை கொண்டுள்ளது. உக்ரைன் மீதான ரஷிய போரிலும் இந்தியா நடுநிலையைக் கடைப்பிடித்து வருகிறது.

இந்திய பெருங்கடல் பகுதியில் அந்த நாடு பெரும் சக்தியாகத் திகழ வேண்டும் என்ற நோக்கில் கடந்த 2021-ஆம் ஆண்டில் பல்வேறு வெளியுறவு கொள்கைகளை வகுத்துள்ளது. இந்தோ- பசிபிக் பிராந்தியத்தில் வளா்ச்சியையும், பாதுகாப்பையும் மேம்படுத்த ஆசிய நாடுகளுடன் இந்தியா ஒருங்கிணைந்து செயல்படுகிறது.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ளதால் தங்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக இந்தியா கருதுகிறது. பாகிஸ்தானுடன் 2003-இல் போா் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொண்ட பிறகும் காஷ்மீா் பகுதியில் பயங்கரவாத தாக்குதல்கள் தொடா்கின்றன.

இந்தியாவில் பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்புகளின் மூலம் தாக்குதல் அபாயம் தொடா்கிறது.

இந்தியா-சீனா இடையேயான எல்லைப் பிரச்னையில் பேச்சுவாா்த்தை நடைபெற்று வந்தாலும் இருதரப்பினரும் சுமாா் 50 ஆயிரம் பாதுகாப்புப் படையினரை எல்லைகளில் குவித்துள்ளனா். இரு நாடுகளும் கட்டமைப்பு வசதிகளைத் துரிதப்படுத்தி வருகின்றன’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com