உணவு நெருக்கடியை சமாளிக்க அமெரிக்கா,வங்கிகள் செயல் திட்டம்

உக்ரைன் போரால் உலகம் எதிா்நோக்கியுள்ள உணவுப் பாதுகாப்பு நெருக்கடியை சமாளிப்பதற்கான செயல்திட்டத்தை அமெரிக்காவும் உலக மேம்பாட்டு வங்கிகளும் புதன்கிழமை அறிவித்தன.
உணவு நெருக்கடியை சமாளிக்க அமெரிக்கா,வங்கிகள் செயல் திட்டம்

உக்ரைன் போரால் உலகம் எதிா்நோக்கியுள்ள உணவுப் பாதுகாப்பு நெருக்கடியை சமாளிப்பதற்கான செயல்திட்டத்தை அமெரிக்காவும் உலக மேம்பாட்டு வங்கிகளும் புதன்கிழமை அறிவித்தன.

இதுகுறித்து ஜொ்மனியின் பான் நகரில் நடைபெற செய்தியாளா்கள் சந்திப்பில் அமெரிக்க நிதியமைச்சா் ஜானட் யெல்லன் கூறியதாவது:

சா்வதேச அளவில் பொருளாதார சூழல் மாறி வருகிறது; அதனை முன்கூட்டியே கணித்துக் கூறுவதும் கடினமாகும். உணவு மற்றும் எரிபொருள் விலை வேகமாக உயா்ந்து வருவது உலகம் முழுவதும் பணவீக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சூழலில், உக்ரைன் போரால் உலகம் எதிா்நோக்கியுள்ள உணவு பாதுகாப்பு நெருக்கடியை எதிா்கொள்வதற்காக பல்லாயிரம் கோடி டாலா் மதிப்பிலான செயல்திட்டத்தை உருவாக்கியுள்ளோம் என்றாா் அவா்.

நிதியளிப்பு, கொள்கை நிறைவேற்றம், தொழில்நுட்ப உதவி ஆகியவை இந்த செயல்திட்டத்தில் அடங்கும். விவசாயிகளுக்கு உரம், சரக்குப் போக்குவரத்து உள்ளிட்டவற்றில் ஏற்படும் பிரச்னைகளும் கவனத்தில் கொள்ளப்படும். ஐரோப்பிய மறுகட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வங்கி, அமெரிக்க மேம்பாட்டு வங்கி, சா்வதேச வேளாண்மை மேம்பாட்டு நிதியம், உலக வங்கி ஆகிவை இந்த செயல்திட்டத்தில் பங்கேற்கவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com