உக்ரைன் போரில் 29,200 வீரர்களை இழந்த ரஷியப் படை!

போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 29,200 ரஷிய வீரர்கள் பலியாகியுள்ளதாக உக்ரைன் தகவல் தெரிவித்துள்ளது. 
உக்ரைன் போரில் 29,200 வீரர்களை இழந்த ரஷியப் படை!

போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 29,200 ரஷிய வீரர்கள் பலியாகியுள்ளதாக உக்ரைன் தகவல் தெரிவித்துள்ளது. 

உக்ரைன் மீதான ரஷியாவின் போா் கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி தொடங்கி சுமாா் மூன்று மாதங்களை எட்டியுள்ளது. படிப்படியாக உக்ரைனின் பல்வேறு பகுதிகளை ரஷியப்படை கைப்பற்றி வருகிறது. 

இருதரப்பிலும் போர் நிறுத்த பேச்சுவார்த்தையிலும் எந்த முன்னேற்றமும் இல்லை. பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் வரமறுப்பதாக ரஷியா குற்றம் சாட்டுகிறது. ஆனால், உக்ரைனில் ஆக்கிரமிப்பு பகுதிகளை விட்டு ரஷியா தன்னுடைய படையைத் திரும்பப் பெற்றால் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு வர முடியும் என்று உக்ரைன் கூறுகிறது. இதனால் பேச்சுவார்த்தையும் இழுபறி நிலையிலே இருக்கிறது. 

மரியுபோல் அணு உலையில் உக்ரைனின் அஸோவ் படையினர் 1000க்கும் மேற்பட்டோர் சரணடைந்துள்ளார். 

இதனிடையே போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 29,200 ரஷிய வீரர்கள் பலியாகியுள்ளதாக உக்ரைன் தகவல் தெரிவித்துள்ளது. 

மேலும் ரஷியாவின் 1,293 ஆயுதப் போர் டாங்கிகள், 3,166 போர் கவச வாகனங்கள், 604 பீரங்கி அமைப்புகள், 93 வான் பாதுகாப்பு அமைப்புகள், 204 போர் விமானங்கள், 170 ஹெலிகாப்டர்கள், 110 கப்பல் ஏவுகணைகள், 13  போர்க்கப்பல்கள் உள்ளிட்ட ரஷிய தரப்பு இழப்புகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com