உக்ரைனின் கெர்சன் பகுதியில் ராணுவத் தளம் அமைக்க முயற்சிக்கும் ரஷியா?

உக்ரைனின் கெர்சன் பகுதியில் ரஷிய ராணுவத் தளம் அமைய வாய்ப்புள்ளதாக ரஷிய செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
உக்ரைனின் கெர்சன் பகுதியில் ராணுவத் தளம் அமைக்க முயற்சிக்கும் ரஷியா?

உக்ரைனின் கெர்சன் பகுதியில் ரஷிய ராணுவத் தளம் அமைய வாய்ப்புள்ளதாக ரஷிய செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.  

உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் 3 மாதங்களாகத் தொடர்கிறது. தற்போது கிழக்கு உக்ரைன், டான்பாஸ் பகுதியில் ரஷியப் படை தீவிர தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. 

இந்நிலையில், உக்ரைனின் கெர்சன் பிராந்தியத்தில் ரஷியாவின் ராணுவத் தளம் அமைக்க ரஷிய அதிகாரிகள், அதிபர் புதினிடம் கேட்க உள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. 

கெர்சன் பகுதி ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் அந்த பகுதி நிர்வாகத்திற்கு ரஷிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். நிர்வாகத்தின் துணைத் தலைவரான கிரில் ஸ்ட்ரெமவ்சவ்-யை மேற்கோள்கட்டி ரஷிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

பிப்ரவரி 24 ஆம் தேதி ரஷியாவின் தாக்குதல் தொடங்கிய நிலையில், கடந்த மார்ச் மாதமே கெர்சன் பிராந்தியத்தின் சில பகுதிகளை ரஷிய ராணுவம் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. கெர்சனின் மக்கள்தொகையில் 50% பேர் மட்டுமே தற்போது அங்கு உள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com