உலகளாவிய பயண வளர்ச்சிக் குறியீடு: தெற்கு ஆசியாவில் முதலிடம் வகிக்கும் இந்தியா

உலக பொருளாதார மன்றம் (world economic forum) வெளியிட்டுள்ள உலகளாவிய பயண வளர்ச்சிக் குறியீட்டில் இந்தியா தெற்கு ஆசியாவில் முதல் இடத்தையும், உலக அளவில் 54-வது இடத்தையும் பிடித்துள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

உலக பொருளாதார மன்றம் (world economic forum) வெளியிட்டுள்ள உலகளாவிய பயண வளர்ச்சிக் குறியீட்டில் இந்தியா தெற்கு ஆசியாவில் முதல் இடத்தையும், உலக அளவில் 54-வது இடத்தையும் பிடித்துள்ளது. 

கடந்த 2019ஆம் ஆண்டு இந்தியா உலகளாவிய பயண வளர்ச்சிக் குறியீட்டில் இந்தியா 46வது இடம் பிடித்து தெற்கு ஆசியாவில் முதல் இடத்தை பிடித்தது. இந்த முறை இந்தக் குறியீட்டில் இந்திய சற்று பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் தெற்கு ஆசியாவில் இந்தியா தொடர்ந்து முதல் இடத்திலேயே நீடித்து வருகிறது. 

இந்த உலகளாவிய பயண வளர்ச்சிக் குறியீட்டில் ஜப்பான் முதல் இடம் பிடித்துள்ளது. அதனைத் தொடர்ந்து அமெரிக்கா, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரேலியா, யுனைடட் கிங்டம், சிங்கப்பூர் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் முதல் 10 இடங்களில் உள்ளன.

உலக பொருளாதார மன்றம் (world economic forum) இந்த உலகளாவிய பயண வளர்ச்சிக் குறியீட்டை 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தயார் செய்து வெளியிட்டு வருகிறது. கரோனா பேராபத்துக்குப் பிறகு முடங்கிப் போன சுற்றுலாத் துறை தற்போது சிறிது சிறிதாக முன்னேறி வருகிருறது. சுற்றுலாத் துறை மீண்டுவரும்  நிலையில் இன்னும் முழுவதுமாக இயல்பு நிலைக்கு திரும்பவில்லை.

117 நாடுகளுக்கு இந்த பயண வளர்ச்சிக் குறியீடு கணக்கிடப்பட்டு  வெளியிடப்பட்டு வருகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் 2022 ஆம் ஆண்டில் சுற்றுலாத் துறை மீண்டும் புத்துணர்ச்சி பெற்று வருகிறது.

இந்த வளர்ச்சிக் குறியீட்டில் அமெரிக்காவைத் தவிர முதல் 10 இடங்களில் உள்ள அனைத்து நாடுகளும் ஐரோப்பியா மற்றும் ஆசியா பசிபிக்கை சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com