வடகொரியாவில் குறைந்த கரோனா பாதிப்பு

வடகொரியாவில் தற்போது கரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் முன்னேற்றம் கண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

வடகொரியா: வடகொரியாவில் தற்போது கரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் முன்னேற்றம் கண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

கரோனா அறிகுறி 2 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு ஏற்பட்டு வந்த நிலையில், நேற்று 1.34 லட்சம் பேருக்கு மட்டுமே அறிகுறி கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடகொரியாவில் நேற்று (மே-12) முதன்முறையாக ஒமைக்ரான் வகை கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் செய்தி நிறுவனங்கள் தெரிவித்திருந்தன.
 
கரோனா தொற்று பரவல் தொடங்கியதிலிருந்து வடகொரியாவில் எத்தகைய பாதிப்பும் பதிவு செய்யப்படாமல் இருந்து வந்தது. கடுமையான எல்லைக் கட்டுப்பாடுகள் காரணமாக நாட்டிற்குள் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தி வருவதாக வடகொரியா தெரிவித்து வந்தது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு இந்தக் கட்டுப்பாடுகள் நிலவி வந்த நிலையில் பியோங்யாங் நகரில் ஒமைக்ரான் வகை கரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

‘வடகொரியாவில் அதிகரிக்கும் காய்ச்சல் பாதிப்பானது தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்களுக்கு எவ்வாறு ஒமைக்ரான் வகை கரோனா தொற்று பரவுகிறது என்பதைக் காட்டுகிறது. இந்தப் பாதிப்பு எண்ணிக்கை வரும் நாள்களில் மேலும் அதிகரிக்கும்’ என தென்கொரியாவைச் சோ்ந்த பல்கலைக்கழக பேராசிரியா் ஜங் ஜே-ஹுன் தெரிவித்தார்.

தென்கொரியாவைச் சோ்ந்த மற்றொரு நிபுணா் கூறுகையில், வடகொரியாவின் உண்மையான கரோனா பாதிப்பு அந்த நாடு தெரிவித்திருப்பதைவிட குறைந்தது மூன்று மடங்கு அதிகமாக இருக்கும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com