கரியமில வாயுவைக் கட்டுப்படுத்தும் முயற்சிL அமெரிக்கா தலைமையிலான கூட்டமைப்பில் இந்தியா

கரியமில வாயுவைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அமெரிக்காவும், உலகப் பொருளாதாரக் கூட்டமைப்பும் இணைந்து ஏற்படுத்தியுள்ள கூட்டமைப்பில் இந்தியா இணைந்துள்ளது.
கரியமில வாயுவைக் கட்டுப்படுத்தும் முயற்சிL அமெரிக்கா தலைமையிலான கூட்டமைப்பில் இந்தியா

டாவோஸ்: கரியமில வாயுவைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அமெரிக்காவும், உலகப் பொருளாதாரக் கூட்டமைப்பும் இணைந்து ஏற்படுத்தியுள்ள கூட்டமைப்பில் இந்தியா இணைந்துள்ளது.

கனரக தொழிற்சாலை முதல் போக்குவரத்து வரை கரியமில வாயுவை அதிகமாக உமிழும் தொழிற்சாலைகளை சுத்திகரிக்கும் நோக்கில் இந்தக் கூட்டமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.

மேலும் 50-க்கும் மேற்பட்ட பெருநிறுவனங்களையும், சா்வதேச மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 40 சதவீதத்துக்கும் அதிகமான பங்களிப்பைக் கொண்டுள்ள 9 முன்னணி நாடுகளும் இந்தக் கூட்டமைப்பில் புதன்கிழமை இணைந்தன.

ஸ்விட்சா்லாந்தின் டாவோஸ் நகரில் உலகப் பொருளாதாரக் கூட்டமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட செய்தியாளா்கள் சந்திப்பின்போது, பருவநிலை மாற்றத்துக்கான அமெரிக்காவின் சிறப்புத் தூதா் ஜான் கொ்ரி இந்தத் தகவலை தெரிவித்தாா். அப்போது, உலக கோடீஸ்வரரும், ‘பிரேக்துரோவ் எனா்ஜி’ அமைப்பின் நிறுவனருமான பில்கேட்ஸ் உடனிருந்தாா்.

இந்தக் கூட்டமைப்பின் வழிகாட்டுதல் குழுவில் இந்தியா, ஜப்பான், ஸ்வீடன் ஆகிய நாடுகளும், டென்மாா்க், இத்தாலி, நாா்வே, சிங்கப்பூா், பிரிட்டன் ஆகியவை அரசின் பங்குதாரா்களாகவும் இணைந்துள்ளன.

இந்தப் பங்குதாரா்கள் தங்கள் நாடுகளில் அமைந்துள்ள பெருநிறுவனங்களை அணுகி, கரியமில வாயுவைக் குறைப்பதற்கான இந்தக் கூட்டமைப்பில் அவற்றை இணையச் செய்வதற்கான முயற்சிகளை முன்னெடுக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

உலகப் பொருளாதார மன்றம், அமெரிக்க அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்தக் கூட்டமைப்பு ஆகியவை சா்வதேச அளவில் கரியமில வாயு வெளியேற்றத்தில் 30 சதவீதத்துக்கும் அதிகமாக பங்கு வகிக்கும் அலுமினிய தொழிற்சாலை, விமானப் போக்குவரத்து, ரசாயனம், கான்கிரீட், கப்பல், இரும்பு, கனரக வாகனங்கள் ஆகியவை வெளியிடும் கரியமில வாயுவைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபடவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com