உலகை உலுக்கிய டெக்சாஸ் துப்பாக்கிச்சூடு...குற்றவாளியின் இறுதி நிமிடங்கள்...திக் திக் திக்

பள்ளி படிப்பை பாதியிலேயே நிறுத்திய குற்றவாளி ராமோஸ், தனது பாட்டி மீது தாக்குதல் நடத்தவிருப்பதாக சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.
துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட ராமோஸ்
துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட ராமோஸ்

அமெரிக்கா டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்க பள்ளியில் 18 வயதே நிரம்பிய ராமோஸ் என்ற நபர் நடத்திய துப்பாக்கிச்சூடு உலகேயே உலுக்கியுள்ளது. இதில், 19 குழந்தைகள், இரண்டு ஆசிரியர்கள் கொல்லப்பட்டனர். கடந்த 10 ஆண்டுகளில், அமெரிக்க பள்ளியில் நடைபெற்ற மோசமான துப்பாக்கிச்சூடாக இது பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவின் சில மாகாணங்களில் துப்பாக்கிகள் வைத்து கொள்வதற்கு எந்த விதமான உரிமம் தேவையில்லை. இதனிடையே, துப்பாக்கி பயன்பாட்டில் கட்டுப்பாடு கொண்டு வர வேண்டும் என அந்நாட்டு அதிபர் பைடன் பேசியுள்ளார். இந்த கொடூர சம்பவம் துப்பாக்கி உரிம விதிகள் குறித்த கேள்விகளை எழுப்பியிருந்தாலும், ராமோஸ் இந்த கொடூர செயலை செய்வதற்கு தூண்டுதலாக அமைந்தது எது என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்துவருகின்றனர்.

தனது 18ஆவது பிறந்தநாள் முடிந்த அடுத்த நாளே, குற்றவாளியான ராமோஸ் துப்பாக்கியை வாங்கியுள்ளார். பின்னர், ஒரு வாரத்திற்கு பிறகு, உள்ளூர் தொடக்க பள்ளிக்கு சென்று மனதை பதறவைக்கும் சம்பவத்தை செய்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது. சிறு வயதிலிருந்தே முரட்டுத்தனமான சுபாவம் கொண்ட ராமோஸ், தன்னை தானே பல நேரங்களில் காயப்படுத்தி கொண்டுள்ளார். 

கடந்த மே 17ஆம் தேதி, 18ஆவது பிறந்த நாளுக்கு அடுத்த நாள், 375 தோட்டாக்களுடன் முதல் துப்பாக்கியையும் இரண்டு நாள் கழித்து இரண்டாவது துப்பாக்கியையும் ராமோஸ் வாங்கியுள்ளார். பள்ளி படிப்பை பாதியிலேயே நிறுத்திய ராமோஸ், தனது பாட்டி மீது தாக்குதல் நடத்தவிருப்பதாக சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்ததாக டெக்சாஸ் ஆளுநர் கிரெக் அபோட் கூறியுள்ளார்.

பின்னர், 66 வயது உறவினரின் முகத்தில் துப்பாக்கியை வைத்து அவர் சுட்டுள்ளார். இருப்பினும், இதிலிருந்து தப்பித்த அந்த உறவினர் உயிருக்கு ஆபத்தான நிலையில், புனித அந்தோணிக்கு அருகே உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, தனது பாட்டியும் தாக்கவிருப்பதாகவும் தொடக்க பள்ளியே அடுத்த இலக்கு என்றும் ராமோஸ் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். 

3.2 கிமீ தூரத்திற்கு வண்டியை ஓட்டி வந்த அவர், ராப் தொடக்க பள்ளியில் மோதியுள்ளார். அந்த பள்ளியில், 7 முதல் 10 வயது வரையிலான 500 குழந்தைகள் படித்துவந்துள்ளனர். பள்ளி அருகே  இறுதி சடங்கு நடைபெறும் வீட்டில் முன் நின்று கொண்டிருந்தவர்களை துப்பாக்கியால் அவர் சுட்டுல்லார். அங்கிருந்து வேலியின் மீது ஏறி குதித்து, திறந்திருந்த பள்ளியின் கதவுகள் வழியே உள்ளே சென்றுள்ளார். 

துப்பாக்கிச்சூட்டை விவரித்த டெக்சாஸ் பாதுகாப்புத்துறை இயக்குநர் ஸ்டீவ் மெக்ரா, "இங்கிருந்துதான், அந்த கொடூர சம்பவம் தொடங்கியது" என்றார். பள்ளி அருகே மக்கள் கூடிய நிலையில், சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்தனர். அலுவலர்கள் பள்ளிக்குள் நுழைய முயற்சித்த நிலையில், துப்பாக்குச்சூடு காரணமாக அவர்களால் உள்ளே செல்ல முடியவில்லை. இதையடுத்து, அமெரிக்க எல்லை காவல்துறை அடங்கிய குழு பள்ளிக்கு சென்று, துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டவரை சுட்டு வீழ்த்தினர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com